இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் கைது!

இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் கைது[1]: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட செக்காடு ஊரில் இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்துக்களை பாவிகள் என்று அழைப்பதும், சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுவதும் இன்றளவில் உள்ளது. கிருஸ்துவர்கள் என்னமோ ஆகாசத்திலிருந்து வந்த மாதிரி பிரச்சாரம் செய்து வ்அருகின்றனர்.

செக்காடு ஊரில் உள்ள பிரபல கன்னிமார் சிலையின் மேல் கால்வைத்து சிகரெட் குடித்துக்கொண்டிருந்த 3பேரை ஊரார் எச்சரித்திருக்கிறார்கள்.  கன்னிமேரியை வணங்கும் இவர்களுக்கு கன்னிமார்களை மதிக்க அவர்களின் தாய்கள் கற்றுக் கொடுக்கவில்லை[2] போலும்! எச்சரித்தவர்களுடன் 3 பேரும் தகராறு செய்திருக்கிறார்கள். வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்திருக்கிறது. தகராறு செய்த 3 கிருஸ்துவ இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.  இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[3].

கலைஞரை ஏசுநாதருடன் ஒப்பிடுவதா? கிருஸ்துவர்கள் கொந்தளிப்பு[4] : முதல்வர் கருணாநிதியை ஏசுநாதருடன் ஒப்பிட்டுப்பேசிய ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ.  அப்பாவுவை கைது செய்யக்கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கிருஸ்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி என்றாலே, போலீஸார். சட்டம், நீதித்துறை, நீதிமன்றங்கள் முதலியன ஒன்றும் செய்யாது. ஏனென்றால் அவையெல்லாம், இவர் கேட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அந்த நிர்வாண வீடியோ எடுத்த முஸ்லீமை கைது செய்யக் கூட, இவர் ஆணைத்தான் தேவைப் படுகிறது, பாவம் போலீஸ் அதிகாரிகள்!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்.எல்.ஏ.  மு.அப்பாவு  அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,  முதல்வர் கருணாநிதியை ஏசுகிருஸ்துவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கொந்தளிப்பு அடைந்த கிருஸ்துவர்கள்,  அப்பாவுவை கைது செய்து எம்.எல்.ஏ.  பதவியை பறிக்கக்கோரி நெல்லை மாவட்டம் உவரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.  கைது செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனம் முன்பு கிருஸ்துவர்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை  செய்யப்பட்டனர்.

திமுக ஆட்சியாளர்களின் சட்டமுரண்பாடுகள்: இத்தகைய முரண்படுதான், திகவினர் விஷயத்திலும் காணப்படுகிறது. இந்துக்கள் தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால், உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், விநாயகரை அவமதித்தால், திட்டி நோட்டீஸ் கொடுத்தால், “உரிய நடவடிக்கை” எடுக்கிறோம் என்றுதான் உள்ளார்களே தவிர, ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை.


[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=39275

[2] உண்மையில், சிறுவயது முதலே, இந்துக்கள் சாத்தானை வழிபடுகிறர்கள், ஆகவே அவர்கள் வீட்டிற்கு செல்லாதே, அவர்கள் பூஜித்துக் கொடுப்பதை தின்காதே….என்றெல்லாம் தான் போதித்து வருகின்றனர். பிறகு எப்படி நல்லிணக்கம், மனித நேயம் இவையெல்லாம் வரும்?

[3] ஆனால், இந்த வழக்கு என்னாகும், குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் தண்டிக்கப் படுவார்களா……என்றெல்லாம், புகார் கொடுப்பவர்களே கண்டுக்கொள்வதில்லை போலும். ஏனெனில், இதற்கு பிறகு, ஒரு செய்தியும் வருவதில்லை.

[4] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=37338

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: