கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்!

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்: கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் மயிலை மாங்கொள்ளை மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை – 6.00 மணிக்கு நடைபெறும் என்று மைலாப்பூர் பக்கம் சில சுவரொட்டிகள் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்இடம்: மயிலை மாங்கொள்ளை மைதானம்

நேரம் : சனிக்கிழமை மாலை – 6.00 மணி

தேதி: 31-07-2010

கிருத்துவர்களா, நாத்திகர்களா, யார் இந்த கூட்டத்தை நடத்துவது? ஏனெனில், ஏற்கெனவே கிருத்துவ தெய்வநாயகம் பலதடவை[1] இங்கு வந்து கலாட்டா செய்துள்ளது நாளிதழ்களின் மூலம் தெரிய வந்துள்ளது[2]. அந்நிலையில், இது அந்த கிருத்துவக்கூட்டமே நடத்தும் கூட்டமா, இல்லை பெரியார் பனியன்கள் அணிந்துகொண்டு வந்து ஆர்பாட்டம் செய்த கூட்டமா, செபாஸ்டியன் சீமானின் கூட்டமா, நெடுமாறன் கூட்டமா, இல்லை சில இந்துக்களுக்கே ரோஷம் வந்து நடத்தப்படும் கூட்டமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

“ருத்ர சேனா” என்றால் என்ன? “ருத்ர சேனா” அன்ற அமைப்பு நடத்துகிறது என்றுள்ளது! ஆனால், தெய்வநாயகம் போன்ற சரித்திர புரட்டர்களுக்கு, “ருத்ரன்” என்பது ஜேஹோவா / ஹேஹோவா[3] என்ற கடவுள் ஆவர்! ஆக யார் இந்த கூட்டத்தை நடத்துகின்றனர் என்பது, அவர்கள் பேசுவதிலிருந்து தான் தெரியவரும் போலிருக்கிறது! “ருத்ரன்” என்றாலும் தமிழ் கடவுள் ஆகாது[4], ஏனெனில் திராவிட புரட்டர்கள் அது ஆரியமயமாக்கப் பட்ட “சிவன்” என்று கூறுவார்கள்!

தமிழர்கள் கோவிலுக்கு விரோதமாக இருப்பது ஏன்? தமிழர்களுக்கு இப்படி அவர்களுடைய கோவில்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? தமிழ், தமிழர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாத்திக பித்து பிடித்து தமது கலாச்சாரம், பாரம்பரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை மறந்து, சொந்தத் தாயை விடுத்து, மாற்றாந்தாயோடு வாழும் போக்கில், கிருத்துவ-முஸ்லிம்-கம்யூனிஸ கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு, இழிவு படுத்தி வருகிறார்கள். கோவிலைச் சேர்ந்த எந்த பொருள், வஸ்து, வாஸ்து[5], விஷயம் என்றாலும், அதில் தங்களுக்கு என்ன காசு கிடைக்கும் என்ற நோக்கில்தான் இந்த பாதகர்கள் இருக்கிறார்கள், செயலில் இறங்குகிறார்கள்.


[1] பிரதோஷம் அன்று கிருத்துவமத பிரச்சார நோட்டீஸுகளை கொடுத்தது – இந்து முன்னணி ராமகோபால் புகார் கொடுத்துள்ளார்.

கோவிலில் நுழைவோம் என்று இருமுறை ஜூன் மாதத்தில் கலட்டா செய்யப்பட்டுள்ளது.

செபாஸ்டியன் சீமானுடன் ஒருமுறை கூட்டம் போட்டது – 02-05-2010.

நெடுமாறன் மற்றும் பெரியார் பனியன்கள் அணிந்துகொண்டு வந்த கூட்டத்துடன் கலாட்ட செய்தது – 13-06-2010

[2] இதைப் பற்றிய விவரங்களை, இதே தளத்தில் மற்ற கட்டுரைகளில் விவரங்களுடன் காணலாம்.

[3] அர்னால்ட் டோயன்பி (Arnold Toyanbee) என்ற பிரபலமான சரித்திர ஆசிரியர் எப்படி ஒரு காட்டுவாசிகளின் கடவுள், காலனி ஆதிக்கக் காலத்தில், கிருத்து பரப்பு முறைகளில், ஒரு அனைத்துலகக் கடவுள் ஆக்கப்பட்டார் என்று தமது நூலில் “An Historian’s Approach to Religion” விளக்கியுள்ளதைப் பார்க்கலாம்.

[4] தொல்லியல் நிபுணர் டாக்டர் ஆர். நாகசாமி பலதடவை ருத்ரன், சிவன்……. எல்லாம் ஒன்றுதான் என்று விளக்கியுள்ளார். ஆனல், அரைகுறை வேக்காடுகள், மூலங்களைப் படிக்காமலேயே, பொய்களைப் பரப்பி, மக்களை மடையர்களாக்கி விட்டுள்ளதை தமிழகத்தில் பார்க்கலாம்.

[5] வஸ்து-வாஸ்து என்றெல்லம் பேசும் திரு. கணபதி ஸ்தபதி கூட நாத்திகர்கள் போல பேசுவது வேடிக்கையான விஷயம். “கடவுளையே” நாங்கள்தாம் உருவாக்குகிறோம் என்ற அகம்பாவமும், சில நேரங்களில் காணப்படுகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்!”

 1. Kuppswamy Says:

  Here Deivanayagam announces entry to Santhome church where was the Original Kapaleeshwarar Temple damaged and church forcibly built.

  Tamils must restore the Temple where Gnasambandar worshipped and made miracles.

  If Karunanithi wants the Kannagi statue at its original spot why not the temple.
  http://saintthomasfables.files.wordpress.com/2010/06/dei-1.jpg?w=614&h=870
  http://saintthomasfables.files.wordpress.com/2010/06/dei2.jpg?w=614&h=827

 2. W. F. Periyardasan Says:

  I have seen the earlier blog and recorded my comments.

 3. தேவப்ரியாஜி Says:

  Nakkeran issue dt. 17.04.2010
  http://www.nakkheeran.in/Users/frmMagazine.aspx?M=1&PV=1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: