விடுதலை சிறுத்தைகளுக்கும் கிருத்துவ மதமாற்றப் பிரசிங்களுக்கும் என்ன தொடர்பு? அதில் அலாவுதீனும் தனது அற்புத விளக்கை ஏன் பிடித்துக் கொண்டு வரவேண்டும்?

விடுதலை சிறுத்தைகளுக்கும் கிருத்துவ மதமாற்றப் பிரசிங்களுக்கும் என்ன தொடர்பு? அதில் அலாவுதீனும் தனது அற்புத விளக்கை ஏன் பிடித்துக் கொண்டு வரவேண்டும்?

விடுதலை சிறுத்தை இயக்கித்தினர் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட மர்மம்:  மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார், சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்பதில் நடந்த முயற்சியில் இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது; எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்[1]. பட்டுக்கோட்டை மதுக்கூர், “தினந்தோறும் நற்செய்தி” ஜெபக்கூட பாதிரியார் சாலமன் (30), விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா (30) ஆகியோர், ஈரோடு நாடார்மேடு பாரதிபுரத்தில் மதமாற்ற பிரசாரம் செய்தனர். இவர்களை, ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன் (30) ஆகியோர் தடுத்து நிறுத்தினர்[2]. இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் சாலமன் பிடிக்கப்பட்டார்[3]. ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட சாலமன், நாடார்மேட்டில் செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில் சிறை வைக்கப்பட்டார்.

மக்களால் பிடிக்கப் பட்ட பாதிரிக்காக விடுதலை சிறுத்தையினர் வந்து கலாட்டா: சாலமனை விடுவிக்க ஜோஸ்வா போன் செய்து சொன்னதும், அங்கு வந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பினர், ஸ்டூடியோ கண்ணாடியை உடைத்தனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளினர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பொழுது, போலீஸாருக்கு கிருத்துவர் மதமாற்ற விஷயத்தில் இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று யோசிக்கவில்லையா?

“விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை” மாவட்ட செயலர் ஜோஸ்வா மற்றும் “முற்போக்கு மாணவர்” கழக மாவட்ட செயலர் அலாவுதின்: விடுதலை சிறுத்தைகளின் மறைமுக மற்றும் நேரிடை கிருத்துவத் தொடர்புகள் தெரிந்ததே[4]. கிருத்துமஸ் கொண்டாட அவர்களது நாத்திகம் தடுப்பதில்லை. திருமாவின் கிருத்துவத்தொடர்பு மிகவும் நெருக்கமானது. திருமா கிருத்துவர் என்று சொல்வோரும் உண்டு. சமீபத்தில்தான், திருமா முஸ்லீம் ஆகப்போகிறார் முஸ்லீம் இயக்கங்கள் என்று விளம்பரப்படுத்தி வருகின்றன[5]. ஆக இப்படி “சமூக நல்லிணக்க பேரவை” என்று பெயரைவைத்துக் கொண்டு மதமாற்றத்தில் நேரிடையாக செயல்படுகின்றனர் என்றால், போலீஸாருக்கு அதுகூடவா புரியவில்லை? ஜோஸ்வா சரி, அலாவுதீன் இங்கு எப்படி வந்தார்? முஸ்லீம் முஸ்லீமாகத்தான் செயல்படும் நிலையில், இப்படி ஏன் கிருத்துவ-முஸ்லீம் கும்பல் இந்துக்களை மதம் மாற்ற ஒன்றாக வேலை செய்கிறது? போலீஸாருக்கு இதுவும் புரியவில்லையா?

வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன: இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வந்த, “ஸ்கார்பியோ’ கார் பறிமுதல் செய்யப்பட்டது. சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை இரு தரப்பினரும் முற்றுகையிட்டனர்.  ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வி.சி., கொடி கட்டிய கார் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்து நின்றது. காரில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். உள்ளே வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன. காரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, இந்து அமைப்பினர்கள் கார் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கலைத்து, காரை அகற்றினர். அடுத்தடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டதால்[6], ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வகுமார் சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது.

இருதரப்பினர் புகார்களும், செக்யூலரிஸ ரீதியில் கைதுகளும்: இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது, என்றாலே போலீஸார் தமது செக்யூலரிஸ வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்றாகிறது. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் –

 1. பட்டுகோட்டை மதுகூரைச் சேர்ந்த பாதிரியார் சாலமன்,
 2. வி.சி., முற்போக்கு மாணவர் கழக மாவட்ட செயலர் அலாவுதின் (36),
 3. மாவட்ட மகிளா விடுதலை இயக்கம் அப்துல் உனிசா (42),
 4. வி.சி., மாவட்ட துணை செயலர்கள் அரசாங்கம் (45)
 5. மதிவாணன் (47),
 6. சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் செக்யுலரிஸ அடிப்படியில் அவர்கள் திருதியாக வேலையை செய்து முடிக்கவேண்டுமே? பாதிரி சாலமன் கொடுத்த புகாரின் பேரில் –

 1. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30),
 2. பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் போஸ் முருகன் (30)  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கையால் தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடார் மேட்டை சேர்ந்த சுந்தரம் தலைமறைவாகி விட்டார். அதாவது தடிக்களுக்கு பதிலாக கைகள் இருந்தாலும், சட்டம் ஒழுங்காகத்தான் வேலைசெய்யும்!


[1] தினமலர், மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் மோதல், ஜூலை 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48793&Print=1

[2] ஏன் மற்ற இந்துக்களுக்கு சூடு, சுரணை…..முதலியவை இல்லையா? அந்த அமைப்புகள் தாம் கேவலமாகச் சித்தரிக்கப் படுகின்றனவே, பிறகு அவர்கள் ஏன் இப்பிரச்சினையில் வரவேண்டும்?

[3] பொதுமக்கள் இவர்களை ஏன் பிடிக்கவேண்டும் என்று போலீஸாரோ, இந்த கூட்டங்களோ யோசித்துப் பார்க்கவேண்டும்.

[4] வேதபிரகாஷ்,திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!, http://dravidianatheism2.wordpress.com/2010/04/27/திருமாவளவனுக்கு-கிருத்த/

[5] பிறைநதிபுரத்தான். திருமா முஸ்லிம் மதமாற்றம்பெரியார் தாசன் வழி- விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா,

http://neetheinkural.blogspot.com/2010/03/blog-post_2834.html

[6] தினமலர் நிருபரின் உபயம் – இப்படி எழுதுவதின் பின்னணி என்ன?

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

7 பதில்கள் to “விடுதலை சிறுத்தைகளுக்கும் கிருத்துவ மதமாற்றப் பிரசிங்களுக்கும் என்ன தொடர்பு? அதில் அலாவுதீனும் தனது அற்புத விளக்கை ஏன் பிடித்துக் கொண்டு வரவேண்டும்?”

 1. vedaprakash Says:

  மதமாற்ற மோதல்: மேலும் ஐவர் கைது
  பதிவு செய்த நாள் : ஜூலை 28,2010,23:11 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49383

  ஈரோடு : மதமாற்றம் பிரசாரத்தால் ஈரோட்டில், நேற்று முன்தினம் நடந்த மோதல் காரணமாக, எட்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

  “தினந்தோறும் நற்செய்தி’ ஜெபக்கூட பாதிரியார் சாலமன்(30), ஈரோடு விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வாவும்(30), நாடார்மேடு பாரதிபுரத்தில் நேற்று முன்தினம், மதமாற்ற பிரசாரம் செய்தனர். மூலப்பாளையம் ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி(30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன் (30) ஆகியோர், பொது மக்கள் உதவியுடன் பாதிரியார் சாலமனை பிடித்தனர். ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். நாடார்மேட்டில் உள்ள செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில், பாதிரியார் சாலமன் சிறை வைக்கப்பட்டார்.

  தப்பி ஓடிய ஜோஸ்வா, விடுதலைச் சிறுத்தை அமைப்பினரை அழைத்து வந்து, பாதிரியாரை மீட்க முயற்சி செய்தார். இதில், போட்டோ ஸ்டூடியோ உடைக்கப்பட்டு, இரு தரப்புக்கிடையே மோதல் உண்டானது. சூரம்பட்டி போலீசார், இருதரப்பினரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்த வி.சி., அமைப்பின் கார் உடைக்கப்பட்டது. பிரச்னை தொடர்பாக பாதிரியார் சாலமன், வி.சி., அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் என, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். வி.சி., அமைப்பின் காரை உடைத்ததாக, காசிபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி (48), போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் செல்வம் (36), வி.சி., பெருந்துறை ஒன்றிய செயலர் விஜயபாலன் (33), அவரது நண்பர் பிரபாகரன் (32), குணாளன்(43) ஆகிய ஐந்து பேரை நேற்று, சூரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

 2. Kuppswamy Says:

  Sir,

  Why do you target only R.ThirumaValava, He is a Hero who changed his father’ name from Ramasamy to Tholkappiyar. Can you tell many who changes father’ name.

  You target because he is a Dalit.

  He follows EVR, C.N.Annadurai and Karunanithi to become close to church and make money. All the above became rich with church support.

  Karunanithi still uses Santhome church’ Tamil Mayyam to make Kanimozi entry to politics and gives Crores of Govt. Money for Sangamam.

  Why should you target only R.Thirumavalavan

  • vedaprakash Says:

   Your sarcasm is well taken and appreciated.

   There is no question of Dalit – non-dalit etc., when serious issues are discussed.

   I do not know as to how EVR, C.N.Annadurai and Karunanithi became rich with church support.

   Of course, the Christian media centre has links with Kanimozhi. I think some three years back, I have given more details in a blog in http://www.indiainteracts.com

   None is targeted here, as you could go through all my blogs covering different aspects of Indian society.

 3. K. Venkatraman Says:

  It is open secret that these groups aid and abet, colloborate with each other to destablize Indian society by all means.

  As otherwise, the cut-throat Christians and Musalmans cannot work together.

  That is why now, all are coming under the banner of Maoists, so that all can attack Indians on any pretext.

 4. W. F. Periyardasan Says:

  Yes, we are all together.

  As Annadurai told in “Ariya Mayai”, “inam inattotuthaan seerum” – that is, “the same race would join hand with the same race”. He said in the context of Dravidians and Muslims.

  Now, it emraces all non-Hindus. Therefore, the Hindus cannot do anything.

  The Police would come to help and protect us only, as they have been our servants.

 5. vedaprakash Says:

  Oh, at least, here you have accepted that you are a non-Hindu, good!

  Be a well-wisher rather than hating Hindus.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: