இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!

இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!
பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்: பாதிரியார் கைது

http://www.dinamalar.com/district_main.asp?id=267

Christian-priest-sex-Ayanavaram

Christian-priest-sex-Ayanavaram

அயன்புரத்தில் கிருத்துவப் பிரச்சினைகள்: அயன்புரம் (25-07-2010): அயன்புரம் சமீபத்தில் 10-20 ஆண்டுகளாக, கிருத்துவர்களின் பிரச்சாரம், தாக்கம், ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.  அடிக்கடி கலாட்டா செய்து பிரச்சினைகள் செய்து வரும் தெய்வநாயகம் போன்றவர்களும் இங்குதான் உள்ளார்கள். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், கைத்துண்டு பிரசுரம், உதவிநியோகம், தின-ஜெபம், வாரக்கூடுதல் என்று அவர்களது பிரச்சார வேலைகள் அதிகமாகி வருகின்றன.

பெந்தகோஸ்தே சர்ச்சில் பாலியல்: அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52) என்ற கிருத்துவ பாதிரி. தனக்கு உதவியாக பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளான்.  உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் “டார்ச்சர்’ கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார். அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார். சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும் (34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.

வேலைப் பார்க்க வந்த பெண்களை கர்த்தர் பெயரைச் சொல்லி கவர்ந்தத்து: பாதிரி செல்வராஜுக்கு தன்னிடம் வேலை பார்த்து வரும் பெண்களின் மீது கண் இருந்தது. பல நேரங்களில் தன்னுடைய இச்சையை மறைமுகமாகவும், நேரிடையாகவும் பேச்சுகளால், செயல்களால் வெளிப்படுத்தியிருக்கிறான். இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார். அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த பெண்களுக்கு  தாம் அந்த காம-பித்தனிடம் வேலை செய்கிறோம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.

அதில் செல்வராஜ் தங்களுக்கு “செக்ஸ் டார்ச்சர்’ கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண்களிடமிருந்து பணம்-நகை பறித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

இந்து பத்திரிக்கை அவன் கற்பழித்ததாகக் கூறுகிறது:

Man arrested on charge of rape

Staff Reporter , The Hindu dated Monday, Jul 26, 2010

http://www.hindu.com/2010/07/26/stories/2010072658900200.htm

CHENNAI: A person running a prayer hall in Ayanavaram was arrested on charges of raping and cheating women here on Sunday.

According to police sources, two women lodged a complaint against Selvaraj (53), who runs a community prayer hall in his house in Ayanavaram. In their complaint, they had alleged that Selvaraj had raped them and cheated them of their cash and jewellery in the name of donation for the development of the prayer hall.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், அவன் கிருத்துவன் என்பதையேக் குறிப்பிடவில்லை! இதுதான் செக்யூலரிஸ பத்திரிகாதர்மம் போலும்! இங்குதான், பத்திரிக்கைகலின் கிருத்துவ சார்பு, அடிமைத்தனம் முதலியன வெளிப்படுகின்றன.

Pastor-sexploitation-Ayanavaram

Pastor-sexploitation-Ayanavaram

“ஃபைத் அசெம்பெளி சர்ச்” – நம்பிக்கையுள்ளவர்கள் கூடும் சர்ச் என்ற பெயரில் வேலை செய்யும் கிருத்துவர்கள், குறிப்பாக பாதிரியார் மற்றும் அந்த இரண்டு சேவகிகள்- இப்படி புருஷனையும், மகன்களையும் ஏமாற்றி, நம்பிக்கைத்துரோகம் செய்து, சோரம் போய் வாழ்க்கை நடத்துவது ந்இனைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஏசுவின் பெயரால் எப்படி கிருத்துவர்கள் இத்தகைய காம-இச்சைகளை, வெறி களியாட்டங்களைதொடர்ந்து செய்து வருகின்றனர் என்று தெரியவில்லை!

மெர்சி மேரியை 2004ம் வருடத்திலிருந்து பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறாராம். மணமாகி இரண்டு வளர்ந்த பையன்கள் இருந்தும் இவ்வாறு செய்தது வியப்பாக இருக்கிறது. இரண்டு பெண்கலிடமிருந்தும் நகையை கடனாகப் பெற்றுள்ளதால், அவற்றைத் திரும்பக்கேட்டபோது, கொடுக்காமல் அலைக்கழித்திருக்கிறான்.

கர்த்தர் பெயரைச் சொல்லி பெண்களை புணர யத்தனித்த காமுகன்: கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, மெர்சி மேரியை கடந்து ஆறு வருடங்களாக செக்ச் வைத்துக் கொண்டிருந்தான். பிறகு, “கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி”, சுகந்தியிடம் வலைவீயிருக்கிறான். இருவருமே தமது கணவன்மார்களிடம் தகராறு, சண்டை என்ற நிலையில் இவனுடன் கருத்துகளை பரிமாற்றாம் செய்து கொண்டபோது, அதனைப் பயன்படுத்தி இப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளான். இது அப்படியே ஜெசுவைட்ஸ் என்ற கிருத்துவ குருமார்களின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் “பெண்களை எப்படி கவருவது” என்றுள்ளதை கடைபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

“எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!”

  1. W. F. Periyardasan Says:

    Yes, he has that capacity to cover one, two and so on, but your samiyars are getting caught, the moment, they start with one!

    • vedaprakash Says:

      So your Samiyars follow Muslim method of having more!

      Here, there is no question of your and our.

      Whoever commits wrong should be punished.

      But you try to glorify the sinners.

    • Annie Thomas Says:

      பெரியார்தாசன் அவர்களே, முதலில் கிருத்துவ / முஸ்லீம் சாமியார்கள் ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள், பிறகு மற்ற சாமியார்களைப் பற்றி பேசலாம்.

      முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொண்டு அடுத்தவரைப் பற்றி பேசலாம்.

      இன்றுள்ள நிலையில், பெண்கள் வெளிப்படையாக சொல்லவே நாக்கூசுகிறது. அந்தட அளவிற்கு, இந்த இருமதத் தலைவர்கள், மடாலய குருக்கள் காம விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

      முதலில், இதெல்லாம் நமது மதத்தின் உள் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டே, பெண்களின் உரிமைகளை பறித்து விடுகின்றனர். பிறகு, புகார் கொடுத்து போலீஸாரிடம், நீதி மன்றத்ட்திற்கு செல்லும்போது, பெண்களின் வாழ்க்கையினையே பலவகைகளிலும் சீரழித்து விடுகின்றனர். அவர்களது பெற்றோர், கணவன்மார், பிள்ளைகள், உறவினர் என்று அனைவரும் பகிஷ்க்கிரக்கப் படுகின்றனர். குடும்பங்களையே அழித்துவிட தயாராக உள்ள்ளனர்.

      இதனால் தான், பல பெண்கள் வெளிப்படையாக புகார் ஒடுப்பதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: