தமிழக பிஷப்புகளின் பேரவைக் கூட்டம் 2010

திண்டுக்கலில் தமிழக பிஷப்கள் பங்கேற்கும் பேரவை கூட்டம்

திண்டுக்கல்லில் சிறப்பு திருப்பலி,பிரார்த்தனை : 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40230

திண்டுக்கல்ஜூலை 16,2010 : திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். திண்டுக்கல்லில் பிஷப் பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி துவங்கியது.இதில் குருக்கள், துறவியர்கள், பங்குத்தந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிறப்பு கருத்தரங்கு,ஆய்வுகள் நடந்தன. திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி தமிழக பிஷப் பேரவை தலைவர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நடந்தது. பிஷப்கள் புதுச்சேரி ஆனந்தராயர், சேலம் சிங்கராயன், திருச்சி அந்தோணி டிவோட்டா, பாளையங்கோட்டை ஜீடுபால்ராஜ், சிவகங்கை சூசை மாணிக்கம், கோட்டார் பீட்டர் ரெமிஜியூஸ், தூத்துக்குடி யுவான் அம்புரோஸ், கும்பகோணம் அந்தோணிசாமி, தஞ்சாவூர் தேவதாஸ் அம்புரோஸ், கோயம்புத்தூர் தாமஸ் அக்குவினாஸ், ஊட்டி அமல்ராஜ், தர்மபுரி ஜோசப் அந்தோணி, செங்கல்பட்டு நீதிநாதன், வேலூர் சவுந்தர்ராஜ், திண்டுக்கல் அந்தோணி பாப்புச்சாமி, சென்னை மயிலை துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மீண்டும் இயேசுவின் ராஜ்ஜியம் உருவாகவும் அனைவரும் ஜெபிக்க வேண்டும்: துன்பப்படுபவர்களுக்கு உதவுங்கள்: சிறப்பு திருப்பலியில் பேசியவர்கள்: யோவான் எழுதிய நற்செய்தியில் தந்தையின் அன்பை வெளிபடுத்துவதற்காகத்தான் நான் உலகிற்கு வந்தேன் என்கிறார் இயேசு. இயேசு தீர்க்கதரிசியாக உலகிற்கு வந்தவர். பாவம் செய்பவர்களுக்கு பரிகாரம் தேடத்தான் அவர் வந்தார். பிறர் துன்பத்திற்கு உதவுவதற்காகத்தான் தன் சரீரத்தை தந்தார். நாமும் பிறர் துன்பப்படும்போது வலிய சென்று அவர்களின் துன்பத்தை களைய வேண்டும்.பிறருக்கு அன்பு செலுத்துவது தான் இயேசுவின் விசுவாசம். அதை நாம் சுவாசமாக பெற வேண்டும். தனது உடல், ரத்தத்தை மக்களுக்காக அர்பணித்தவர் இயேசு. அவரின் நாமம் நிலை பெற்று இருக்கவும், மீண்டும் இயேசுவின் ராஜ்ஜியம் உருவாகவும் அனைவரும் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு பிஷப்கள் நற்செய்தியில் கூறினர்.

மும்மதத்தினர் பங்கேற்ற பாராட்டு விழா: தமிழக பிஷப்புகளுக்கு மும்மதத்தினர் பங்கேற்ற பாராட்டு விழா நடந்தது.திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார், நகராட்சி தலைவர் நடராஜன், திருவருட் பேரவை தலைவர் எஸ்.கே.சி. குப்புசாமி, வர்த்தக சங்க துணை தலைவர் ஷாகுல்அமீது, பாவா மைதீன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழக பிஷப்புகளின் பேரவைக் கூட்டம் 2010: திண்டுக்கல் (ஜூலை 12,2010) : தமிழக பிஷப்கள் பங்கேற்கும் கூட்டம், திண்டுக்கலில் இன்று ஜூலை 12, 2010 முதல்  16 வரை நடக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புச்சாமி கூறியிருப்பதாவது:

“திண்டுக்கல் மறை மாவட்டத்தில் முதன் முறையாக தமிழக பிஷப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, முள்ளிப்பாடி பிஷப் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு, திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் ஆலயத்தில் பிஷப் பேரவை தலைவரான ஏ.எம்.சின்னப்பா தலைமையில் பிஷப்கள் பங்கேற்கும் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

“இரவு 7.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் தலைமையில் பிஷப்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில், சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய மறை மாவட்ட பிஷப்கள், திண்டுக்கல் மறை மாவட்ட குருக்கள், இருபால் துறவிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்”, இவ்வாறு அந்தோணி தெரிவித்துள்ளார்.

இருபால் துறவிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்: என்றதில், “இருபால் துறவிகள்”, ஆண்-பெண் துறவிகள் பங்கு கொள்கின்றனர் என்றால், விஷேசமான கூட்டமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. இதில் நிச்சயமாக “இருபால்” சமாச்சாரங்கள் பேசப்படும், விவாதிக்கப்படும், ஏனெனில், அத்தகைய “பாலான” விஷயங்கள் நிறையவே உள்ளன.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்: “பல்வேறு அமைப்புகள்” எனும்போது மற்ற கத்தோலிக்கர்-அல்லாத-கிருத்துவர்களை அழைத்திருப்பதாகக் கொள்ளலாம். இன்று கத்தோலிக்கர்களுக்குப் போட்டியாக, புரொட்டஸ்டன்ட் மிஷனரிகள் அதிகமாக தமிழகத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

4 பதில்கள் to “தமிழக பிஷப்புகளின் பேரவைக் கூட்டம் 2010”

 1. W. F. Periyardasan Says:

  We had women meeting seperately and all had get-together. What can you do?

 2. Paul Hector Davidson Says:

  The Indian church has gone to doldrum facing lot of problems. In India, they have been suppressing the facts and politicising the theological issues and diluting the theology.

  Thuis, the believers have to face the clergy and the general public in dilemma.

  When what is preached is not followed, definitely, people doubt and question their credentials.

  Therefore, the Indian Christians, particularly, the Catholics should come out such double standrards to create confidence and gain the glory on the earth.

 3. seenu Says:

  new message sent my mail id

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: