மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31190

திண்டுக்கல் : கொடைக்கானலில், பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளருக்கு உடந்தையாக இருந்த முதல்வரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் எம்.எம்.,தெருவில் உள்ள கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட்(70). இப்பள்ளியில் உதவித்தொகை பெறும் சில மாணவிகளை, தனது வீட்டில் தங்க வைத்திருந்தார். இவர்களில் பூடானை சேர்ந்த 14 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக, சம்பந்தப்பட்ட மாணவியின் பாதுகாவலர் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். பள்ளி தாளாளர் பிரைட் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

KPS-Registrar-arrested-Sex.scandal

KPS-Registrar-arrested-Sex.scandal

இந்நிலையில், அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி மாலா, கொடைக்கானலிலுள்ள தாளாளர் வீட்டில் தங்கியிருக்கும், பிற மாணவியரிடம் வாக்குமூலம் பெற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். இதையடுத்து, முத்துச்சாமி எஸ்.பி., நேற்று முன்தினம் கொடைக்கானலில் 10 மாணவியரிடம் விசாரணை நடத்தினார். அதில் அந்த தாளாளரின் பாலியல் விவரங்கள் பல வெளிவந்தன. மேலும், 6 மாணவியரிடம் விசாரணை நடத்த திண்டுக்கல் எஸ்,பி., அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. நடந்த விசாரணை  பிரைட்டின் நடத்தை “பிரைட்டாக”க் காட்டவில்லை.

KPS-Principal-arrested-Sex.scandal

KPS-Principal-arrested-Sex.scandal

ஷிபாபால் என்ற பெண்மணியே இதற்கு ஒத்துழைத்தது அதிர்ச்சியாக உள்ளது: இந்நிலையில், நேற்று அதிகாலை பள்ளி முதல்வர் ஷிபாபாலை(36) தாளாளருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். முன்பு ஊடகக்காரர்கல் சென்று, இவரிடம் கேட்டதற்கு திமிராக பதில் சொன்னதை ஞ்ஜ்பகத்தில் கொள்ளவும். கோர்ட் உத்தரவுப்படி, அவர் நிலக்கோட்டை கிளைச் சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டார். கைதான ஷிபாபால் திருநெல்வேலியை சேர்ந்தவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த பள்ளி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

Sheebapaul-arrested-KPS

Sheebapaul-arrested-KPS

பிரைட், தாளாளர் சரண் : பூடான் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் சிக்கியுள்ள, கொடைக்கானல் பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட் நேற்று ஸ்ரீவி., மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில் படித்து வந்த 14 வயது பூடான் மாணவியை, தாளாளர் பிரைட்(73), தனது அறைக்கு வரச் சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். அவர், மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அவர், ஸ்ரீவி., மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, நீதிபதி ராஜகுமார் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ஸ்ரீவி., சப் – ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஷிபா பால்-பிரை கூட்டு: இது அபயா கொலை விஷயத்தில் எப்படி, இரு பாதிரி-ஒரு கன்னியாஸ்திரீ காமக்களியாட்டங்களில் ஈடுபட்டார்களோ, அதே மாதிரி இருக்கிறது. கிருத்துவர்கள் தங்களது பலவித  பலங்களால், இவை எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள். எந்த ச-டிவியிலும் இவர்களின் சரச லீலைகள் காட்டப்படமாட்டாது; நக்கிரனும் லெனினை அனுப்பி வீடியோ எல்லாம் எடுக்க மாட்டார்கள். ஷிபா பாலின் ஒத்துழைப்பு, பிரைட்டின் இரவு நேர உல்லாசங்கள் முதலியவை அதிர்ச்சிற்குள்ள விஷயங்கள். எப்படி, இவர்கள் பெண்களை, வயது வந்த சிறுமியர்களை – மாணவிகளை இவ்வாறு செக்ஸ் வேலைகளில் ஈடுபடுத்துவார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.

மாணவியிடம் தகாத முறையில் நடந்த பள்ளி தாளாளர் முன்ஜாமீன் தள்ளுபடி : ஐகோர்ட் கிளை உத்தரவு (05-07-2010): இந்த லட்சணத்தில் நேரத்தை இழுக்கவும், அந்நேரத்தில் சாட்சிகளை, ஆதாரங்களை அழிக்கவும் மறுக்கவும், முன் ஜாமீன் ஒன்று போட்டு வைத்தார்கள். ஆனால், இவ்வளவு அசிங்கங்கள் வெளி வந்த பிறகு, மறுபடியும், கோர்ட்டில் விவாதம் முதலியவை வரவேண்டாம், என்ற முடிவில் பிரைட்டின் வக்கீல் தீர்மானித்தார். பிரைட்டின் முன்ஜாமீன் மனு நேற்று நீதிபதி ஆர். மாலா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை வாபஸ் பெறுவதாக அவரது வக்கீல் தெரிவித்தார். அதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். ஆக, சாமர்த்தியமாக, தேவையில்லாத அதாவது அவர்களுக்கு பாதகமாக அதிக செய்திகள் வராதபடி, அமுக்கிவிட்டனர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

4 பதில்கள் to “மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!”

 1. நெட்டிமையார் Says:

  இந்தக் கிழவனுக்கும், அந்த காமுக பாதிரி, பாஸ்டர் முதலியோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அருகில் பெண்கள் இருக்கிறார்கல், அவர்கள் இறைவனின் ஏஜென்ட் என்று மதிக்கிறார்கள். அதுவும், மேலைநாட்டு முறைப்படி, சில நேரங்களில் தொட்டுப் பேசினாலும் தவறாக நினைப்பதில்ல்லை என்ற நிலை. இதையெல்லாம் சாதகமாக எடுத்துக் கொண்டுதான், அந்த கிழவன் இவ்வாறு கா சல்லாபங்களில் ஈடு பட்டுள்ளான்.

  போதாகுறைக்கு, ஷீபா போல பெண்களின் ஒத்துழைப்பு வேறு. ஆக வக்கிர காமுக பெண், ஆண் என சேர்ம்போது, மிருகங்களின் நிலையைத்தான் அடைவார்கள்.

  இதெல்லாம், அளவிற்கு அதிகமாக, இறையியல் ரீதியில் மூளைச்சலவை செய்வதால், மனச்சிதைவு அடைந்து, அந்த பாதிரிகள், பாஸ்டர்கள் என்று சொல்லிக் கொள்ளக்குடிய கயவர்கள் தங்களது மனங்களை அவ்வாறு வக்கிரப்படுத்திக் கொள்கிறார்கள்.

  அதே மாதிரி, பெண்களையும், தமது இச்சைகளுக்கு உட்பட அத்தகைய புளூஃபிளிம் முதலியவற்றைப் பார்த்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொண்டு தம்மிடம் வரும்படி தூண்டுகிறார்கள்.

 2. மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்! « பெண்களின் நிலை Says:

  […] […]

 3. பல இளம் மாணவிகளை பற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] […]

 4. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/07/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: