ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான், நெடுமாறன்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன? (2)

ஆர்ச் பிஷப்சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான், நெடுமாறன்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன? (2)

தன்மானத் தமிழர் கூட்டமைப்பு போர்வையில் கிருத்துவர்களின் கலாட்டா: கிருத்துவர்களின் கலாட்டா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-06-2010) தமாஷாக முடிந்தது[1]. தொடர்ந்து “தெய்வநாயகம்” போர்வையில், கிருத்துவர்களும், சில விஷமத்தன திராவிட கருஞ்சட்டைகளும் சேர்ந்து கொண்டு (அல்லது கிருத்துவர்களே அப்படி பெரியார் படம் போட்ட சட்டைகளை அணிந்தும் வந்திருக்கலாம்), சிதம்பரத்தைப் போன்ற பிரச்சினையை உருவாக்க முயற்சி நடந்து வருகின்றது[2]. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க ஆணையிட்டிருப்பதால், போலீஸார் கவனமாகவே இருந்தனர்[3].

கிருத்துவர்களின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தெய்வநாயகத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்ததால், கிருத்துவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு, ஏதோ தமிழ் கும்பல்கள்தாம் இத்தகைய போராட்டம் நடாத்துவதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்கள் உண்டாக்க முயற்சித்தன[4]. ஆனால், சம்பந்தம் இல்லாத ஆட்கள் வந்தது, போலீஸாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயலும் போராட்டத்தை நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார். கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்ட வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்மானத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது[5]. கிருத்துவர்களுக்கு இதில் என்ன வேலை என்று கேட்டு கடிதங்கள் போலீஸாருக்குச் சென்றுள்ளன. இதையடுத்து கோவிலிலும், கோவிலுக்கு வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாவலர் ராமச்சந்திரன், பழ.நெடுமாறன் இவர்களுக்கும் தெய்வநாயகத்திற்கும் என்ன தொடர்பு? தெய்வநாயகத்தின் கிருத்துவமத பின்னணியை மறைத்துக் கொண்டு கலாட்டா செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், பாவலர் ராமச்சந்திரன் என்ற ஆளைப் பிடித்திருப்பது கிருத்துவர்களின் திசைத்திருப்பும் போக்குத் தெரிகிறது. இந்த நிலையில்தான் நேற்று மாலையில் (13-06-2010), தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன்[6] தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் போர்வையிலுள்ள கிருத்துவர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். பழ.நெடுமாறன் வரவழைக்கப்பட்டு அவர் வாழ்த்துரையும் வழங்கச் செய்தனர். நூறு / ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்[7] இதில் பங்கேற்றனர்[8] (தமிழ் பத்த்ரிக்கைகள் இப்படி பொய்சொல்வது ஒன்றும் வியப்பில்லை). பின்னர் கோவிலுக்குள் நுழைந்து கருவறைக்குள் புகுந்து வழிபாடு நடத்த போராட்டக் குழுவினர் முயன்றனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்தனர். அப்போது அங்கு பலத்த வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கத்தோலிக்க பிஷப், செபாஸ்டியன் சீமான், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்த மர்மம்: முன்னர், இவர்களுக்குள்ள தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளேன்[9]. சென்னை பிஷப்புகளுடன் செபாஸ்டியன் சீமான் சந்தித்து வருவது (2008), இலங்கைப் பிரச்சினையிலிருந்து தொடர்வதாக உள்ளது[10]. சமீபத்தில், தெய்வநாயகம் பிரச்சினையைத் தீர்க்க-உதவ, கத்தோலிக்க பிஷப், செபாஸ்டியன் சீமானைப் பணித்ததாகத் தெரிகிறது. முன்பு, அருளப்பா கையாண்ட முறையை, இப்பொழுதயை ஆர்ச் பிஷப்பும் கடைப் பிடிப்பதாகத் தெரிகிறது[11]. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பின்னால் இருந்த தெய்வநாயகம், இப்பொழுது முன்னால் வந்தாகிவிட்டது. ஆனால், செபாஸ்டியன் சீமான், ஆச்சார்யா பாலுடன்[12] ஒப்பிட முடியாது. இருப்பினும், பிஷப் அடக்கி வாசிக்கவே விரும்புகிறார். முன்பு அந்த தமிழர் சமயம் மாநாட்டை[13] நடத்தியபோது, தெய்வநாயகம் “கத்தோலிக்கர் அல்லர்” என்பது போலக் காண்பிக்கப் பட்டது[14], ஆனால் கிருத்துவர் இல்லை என்று மறுக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால், எப்படி பிஷப் தமது முழு ஒத்துழைப்பு, இடம், வசதி எல்லாம் கொடுத்திருப்பார்? அதே மாதிரிதான் செபாஸ்டியன் சீமான் “தமிழர்’ என்றுதான் காட்டிக்கொள்ள முயற்சிப்பது தெரிகிறது. அப்பொழுது “தமிழனுக்கு” மற்ற விரோதங்கள், வெறுபுகள், காழ்ப்புகள்………வருகின்றன எனும்போது, மற்ற தமிழ் பேசும் இந்தியர்கள், இவர்களின் தன்மையினை அறிந்து கொள்கிறார்கள்.

செபாஸ்டியன் சீமானுக்குப் பிறகு நெடுமாறன்: தனது கிருத்துவ அடையாளங்கள் மேலும் வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து, செபாஸ்டியன் சீமான் பயந்து ஒதுங்கியதைப் போலக் காட்டிக்கொண்டுள்ளார். தெய்வநாயகம், அந்தோணி சைமன் ராஜாவை தொடர்பு கொண்டு பேசினாலும்[15], செபாஸ்டியன் நாஜுக்காகத் தப்பிவிட்டதாகத் தெரிகிறது. நெடுமாறனுக்கு இத்தகைய பிரச்சினைகளில் புகுந்து, பிரபலமாக வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான், கைதாகி விட்டிருக்கிறார்கள். இருப்பினும் ஆசை விடவில்லை, இப்பொழுது இந்த கிருத்துவ கும்பலுடன் சேர்ந்து கொண்டு, கைதாகி வழக்கம் போல மாலையில் விடுதலையாகியுள்ளார்.

பார்ப்பன எதிர்ப்பு, கலைஞர் எதிர்பாக மாறிய மர்மம்: கிருத்துவர்களுக்கு, திடீரென்று பார்ப்பன எதிர்ப்பு கைவிட்டிருப்பது, ஆச்சரியமாகத்தான் உள்ளது. கத்தோலிக்க-புரொடஸ்டன்ட் வேறுபாடு, திருச்சி கிருத்துவத் தமிழ் மாநாட்டின் மூலம் வெளிப்பட்டுவிட்டதில், சின்னப்பாவிற்கு பெருத்த கவலையாகி விட்டது[16]. ஜான் சாமுவேல், தெய்வநாயகத்தைக் கூப்பிடாதது இந்த கிருத்துவப் பிளவை எடுத்துக் காட்டவே செய்கிறது[17]. என்னத்தான் ஏசு கிருஸ்து கனவில் வந்து கதை சொன்னார் என்றெல்லாம் பொய்கள் சொல்லிக்கொண்டு அலைந்தாலும், பணத்தைக் கொள்ளையடிப்பது, அரசியல் அதிகாரம் பெறுவது, கலைஞரிடம் விரோதம் பாராட்டம் இருப்பது என்ற நெளிவு-சுளிவுகளில் கிருத்துவர்கள் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். ஆனால், அந்த “லூஸ் தெய்வநாயகம்” ஒரு படி அதிகமாகச் சென்றுவிட்டதால், சின்னப்பாவிற்கு வேறு கோபம். ஏற்கெனவே நாங்கள் வேறு சின்னாப்பா, CBCI போன்ற அவர்களுடைய மேலிடங்களுக்கு ஈ-மெயில்கள் அனுப்பியதால், கிருத்துவப் பின்னணியை மறைத்துள்ளது நன்றாகவே தெரிகின்றது. உள்ளூர் போலீஸாரோ, கலைஞருக்கு எதிராக எந்த விஷயமும் வராமல் பார்த்துக் கொள்ள முயன்று வருகிறார்கள். உள்ளூர் பார்ப்பன எம்.எல்.ஏ, எ.ஸ்.வி. சேகரைப் பற்றி சொல்லவே வேண்டாம், திமுக எம்.எல்.ஏ மாதிரியாகவே செயல்பட ஆரம்பித்து விட்டார். ஆகையால், பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் எதிர்ப்பாக மாறியது.

கலைஞர் எதிர்ப்பு, கோவில் நுழைவு போராட்டமாகிய மர்மம்: லிங்கத்தைத் தொட்டு வழிபட வேண்டும் என்று கிருத்துவடர்கள் ஆரம்பித்தபோது, வேறொரு கூட்டம், மேரியை தொட்டு வணங்க வேண்டும் என்று சாந்தோம் சர்ச்சில் நுழைய திட்டமிட்டதாகத் தெரிகிறது[18]. கபாலீஸ்வரர் லிங்கத்தை காசி விஸ்வநாதர் லிங்கத்தைப் போல தொட்டு வழிபாடு செய்ய ஆசையாம். அதற்கு கிருத்துவ செபாஸ்டியன் சீமான்-தெய்வநாயகம் கோஷ்டி போராட்டமாம். ஆமாம், அதே மாதிரி மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம் என்று இந்துக்களோ அல்லது இந்த கிருத்துவ செபாஸ்டியன் சீமான்-தெய்வநாயகம் கோஷ்டிகளோ கிளம்பிவிட்டாலோ என்ன செய்வது?  அப்பத்தை எச்சில் படுத்தி கொடுப்பதை பிரசாதமாக உண்கிறார்கள்; அதேபோல மேரியையும் விட்டுவிடுவார்களா? உண்மையான கிருத்துவர்கள் நம்பிக்கையாக யூகேரிஸ்டில் ரொட்டி-சாராயம், ஏசுவினது உடலாகவும், ரத்தமாகவும் மாறுவதாகா நினைத்துப் புசித்திட-குடித்திட வேண்டும்[19]. அதைவிடுத்து, உண்மையாகவே பிணத்தை வைத்துக் கொண்டு அவ்வாறு செய்வார்களா? இவ்வாறு, எல்லாவற்றையும் நிதர்சனமாகவே செய்யவேண்டும் என்றால், இந்தியமுறைப்படி தொடலாம் என்றால், மேனாட்டு முறைப்படிக் கட்டிக் கொள்ளலாம், காபாவிற்கு முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுக்கலாம். முதலில் அதுமாதிரி சர்ச்சில் செய்து பழகிக்கொள்ளலாமே? அதை விடுத்து கிருத்துவர்கள், கபாலீஸ்வரர் கோவிலின் மீது ஏன் கண் வைக்க வேண்டும்?

சர்ச்சைவிட்டு, கோவிலைப் பிடித்த சனி: இங்குதான், அனைத்துலக கிருத்துவர்களின் சதி வெளிப்படுகிறது. பிரான்ஸிஸ் சேவியர் குளூனி என்ற கிருத்துவ பாதிரியாரின் சதிதிட்டமும் வெளிப்படுகிறது. ஏனெனில், இவருக்கும் கபாலீஸ்வரர் கோவிலின்மீது மட்டும் அல்ல, மற்ற பெரிய கோவில்களின்மீதும் கண். குறிப்பாக பெண் கடவுளர்களைப் பார்த்தால் விடமாட்டார். உடனே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார். மைலாப்பூரிலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்து, கோவிலுக்கு வருவோர்-போவோர் முதலிய எல்ல நுணுக்கமான விஷயங்களை சேகரித்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, குறிப்பாக, வைஷ்ணவ கோவில்களைப்பற்றியும், சம்பிரதாயங்களைப் பற்றியும், நிறையவே தெரிந்துகொண்டிருக்கிறார். உண்மையென்னவென்றால், அத்தகைய நுணுக்கங்களையெல்லாம், இவருக்குச் சொல்லிக் கொடுத்ததே வைஷ்ணவர்கள்தாம்[20]. “மைலாப்பூர் மாதரசம்மன் அந்தாதி” என்ற போலிப்பாட்டை வைத்துக் கொண்டு, ஆராய்ச்சி செய்துள்ளார்[21].  அதாவது, மேரித்தான் உசத்தி, மற்ற மாரியம்மன், லக்ஷ்மி, அமிராமி…………..முதிலோர் எல்லாம் வெறும் தேவதைகள்தாம், என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துள்ளார். இவர் குறிப்பிடுவது, ஏசுவின் தாயார் மேரி மைலாப்பூரில்தான் இருக்கிறார் என்பதாகும்!

பிராமணர் வேடம் போட்டு வந்த டி நொபொலியும், கருவரைப் போராட்டமும்:  முன்னர் ராபர்டோ டி நொபொலி[22] விட்ட புருடாக்களை நம்பிக் கொண்டு, இந்த குளூனி, மதுரை காமாட்சியம்மன் கோவில், மைலாப்பூர், ஓரியூர், முதலியன முன்பு சர்ச்சுகளாக இருந்தன, ஆனால், இந்துக்கள்தாம் அவற்றைக் கோவில்களாக மாற்றிவிட்டனர் என்று எழுதிவைத்ததை நம்பி, இவரும் தமது ஆராய்ச்சியை தொடர்கிறார்! அந்த இடங்களையெல்லாம் மீட்க வேண்டும் என்றும் பலரையும் சந்தித்துத்து அதற்கான வேலைகளை செய்வதாக விஷயம் வெளிவந்தது[23]. ஆக, இந்தியாவில்-சென்னையில் எப்படி தெய்வநாயகம் போன்ற பைத்தியங்கள் இருக்கின்றனவோ, மேனாட்டிலும் அத்தகைய கிருத்துவமத பைத்தியங்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆக, வேண்டுமென்றே கிருத்துவர்கள் செய்து வரும் விஷமத்தனம், அவ்வப்பொழுது, இவ்வாறு வெளிப்படுகிறது ஆனால், உண்மையான பின்னணி ரகசியமாகவே உள்ளது. போலீஸார் மற்ற அரசுதுறைகள் இவர்களுக்கு எதிராக செயல்படுவது போல இருந்தாலும், மறைமுகமாக கிருத்துவர்களுக்கு சாதகமாக உதவுவது தெரிகின்றது. இந்துக்கள் – அதாவது அப்பெயர்கள வைத்துக் கொண்டுள்ளவர்களும், இதில் ஐந்தாம் படையாக வேலை செய்து வருகின்றார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது[24]. ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்[25]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை. ஆகவே அது (எக்ஸ்பிரஸ்) முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது[26]. அவரே அங்கிருந்து சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – கிருத்துவக்கூட்டு சதி: குறிப்பாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த பிரச்சினையில் என்ன தொடர்பு, ஆசை உள்ளது என்று தெரிவவில்லை. சென்ற மாதம் 03-05-2010 அன்று விஷமத்தனமாக பொய்யான ஒரு செய்தி வெளியிட்டது என்றால், இம்மாதமும், வேறுவிதமாக செய்தி கொடுத்திருக்கிறார்கள். தமிழ் நாளிதழ்கள் அதற்குப் பிறகுதான் வெளியிட ஆரம்பித்தன. ஆகவே, இதில் நிச்சயமாக கிருத்துவ ஊடகதாரிகளின் சதி வெளிப்படுகிறது. பாபு ஜெயகுமார் என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள கிருத்துவர் தான் இதற்கு உதவியது என்று தெரிகிறது. அதாவது சென்றமுறை அப்படி பொய்யாக படத்துடன் செய்தி வந்ததற்கு இந்த் ஆள்தான் பொறுப்பு என்று தெரிகின்றது. வெறும் தெய்வநாயகத்தால் மட்டும் இக்காரியங்கள் நடந்துவிடமுடியாது, ஏனெனில் அது வெறும் கருவிதான், ஏவிவிடுவது, ஆட்டி வைப்பது, சின்னப்பாதான், அதாவது அரசியல்-பணம்பலங்கள் பொருந்திய கத்தோலிக்கச் சர்ச்தான்.

கிருத்துவர்களின் உள்-நோக்கம் என்னவாகயிருக்கும்? பிஷப் சின்னாப்பா, CBCI போன்ற அவர்களுடைய மேலிடங்களுக்கு ஈ-மெயில்கள் அனுப்பினாலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. அதே மாதிரியாக தெய்வநாயகம், தனது மகள் தேகலா மூலம் ஈ-மெயிலில் அந்த நோட்டீஸுகளை அனுப்பிவைத்தாலும், பதிலளிக்காமல் இருப்பது, அவர்களது பயந்தாங்கொள்ளித்தனம்தான் தெரிகிறது. இந்த நோட்டீஸை அனுப்பி, “உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்”, என்று தேவககலா மெயில் அனுப்பியுள்ளார்.

Flag this message

‘KARUVARAI VAZHIPAADU’ at Kapaleeswarar Temple, Mylapore, Chennai,on 13-06-2010 at 3.30

Saturday, 12 June, 2010 3:09 PM

From:

“dravida” <dravida@eth.net>

Add sender to Contacts

To:

“vaishnavi krishnan” <pammalvaishnavi@gmail.com>, “avg krishnan” <avgkrishnan@gmail.com>, “Devananda Saraswati Swami” <swamidevananda@gmail.com>, vedamvedaprakash@yahoo.com, kunjethy@gmail.com, ccbi@airtelmail.in, csi@vsnl.com, cbcimo@bol.net.in, parishpriest@santhomechurch.com, archmsml@vsnl.com, sunder_yesvadian@yahoo.com… more

Message contains attachments

2 Files (2102KB) | Download All

Anbudaiyir,

Please see the attachment on  ‘KARUVARAI VAZHIPAADU’ at Kapaleeswarar Temple, Mylapore, Chennai, on 13-06-2010, at 3.30 pm.

Expecting your valuable comments.

Nandri.

Anaiththu Thanmaana Thamizhar Koottamaippu.

ஆனால், உடனடியாக அதற்கு பதில் அளித்தாலும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதிலிருந்து தெருக்களில் கலாட்டா செய்து, பிரபலமடைய வேண்டும், “அரசியல்” செய்யவேண்டும், என்ற மனநிலையில் உள்ளார்கள் போலும். துணிவிருந்தால், இக்காலத்தில் இணைத்தளத்திலேயே அறிவுப்பூரமாக வாதாடலாம், விமர்சிக்கலாம், கருத்துக்களை ஆதாரத்துடன் வைக்கலாம். அவ்வாறு இல்லாமல், இப்படி நிழல்-யுத்தங்கள் நடத்துவது கிருத்துவர்களுக்கு அழகல்ல.

தமிழர்களுக்கு, நாத்திகர்களுக்கு, போலி சித்தாந்திகளுக்கு எச்சரிக்கை: தமிழின் பெயரால், தமிழர்களை ஏமாற்றமுடியும் என்றால், அதனை தமிழகத்தில் / தமிழ்நாட்டில்தான் பார்க்க முடியும். யார் வேண்டுமானாலும் “தமிழர்”, “நாத்திகர்” என்ற போர்வையில் தமிழர்களது கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், மதம், நம்பிக்கைகள்…..முதலியவற்றை குறைகூறினால், விமர்சனித்தால், ஏன் அவதூறு பேசி தூஷித்தால் கூட, பகுத்தறிவு மாயையில் மூடிவிடப் பார்ப்பார்கள், ஆமாம், இந்த புதிய “பார்ப்பார்கள்”. எனவேதான், இங்கு பாவலர் ராமச்சந்திரன் என்ற பெயரிலும், நெடுமாறன் பெயரிலும் “தமிழர்கள்” என்று சொல்லிக்கொண்டு கிருத்த்வ துரோகிகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு, ஔரங்கசீப்-மாலிக்காஃபூர் வேலைகளைச் செய்யத் துணிந்துள்ளனர். நடப்பதே அவர்கள் ஆட்சிதான் என்பதால், கேட்கவே வேண்டாம். ஆகவே, நிலை இப்படியே தொடர்ந்தால், இத்தகைய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், மதம், நம்பிக்கைகள்…..முதலியன நிச்சயமாக அழிக்கப் படும். அப்பொழுது கூவி, கதறி, அழுது, ஓலமிட்டு புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

வேதபிரகாஷ்

15-06-2010


[1] http://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html

[2] http://www.timeschennai.com/index.php?mod=article&cat=Chennai&article=1803

[3] போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் இதைப் பற்றிய புகார்கள் சென்றுள்ளன. வேடிக்கையென்னவென்றால், தெய்வநாயகமே அனுமதி கேட்டு கடிதங்கள் எழுதியுள்ளது, அங்கு சமர்ப்பித்துள்ளது, பாதுகாப்பு கேஏட்டுள்ளது முதலியன….

[4] பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டது தெரிகின்றது.

[5] நக்கீரன், தினகரன், தினத்தந்தி, தட் ஈஸ் தமிள் (இணைதளம்) இது பற்றிய செய்தியை திரித்துதான் வெளியிட்டுள்ளது:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=573492&disdate=6/14/2010

http://thatstamil.oneindia.in/news/2010/06/14/pazha-nedumaran-kapaleeswarar-temple-arrest.html

http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=8061&id1=9

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33934

[6] இந்த ஆள் யார், பின்னணி என்ன என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த விஷயத்தில் கிருத்துவர்களுடன் சேர்ந்து ஏன் செயல்படவேண்டும் என்பதும் புரியவில்லை.

[7] “ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்” என்று இங்குள்ளது,  http://thatstamil.oneindia.in/news/2010/06/14/pazha-nedumaran-kapaleeswarar-temple-arrest.html இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதில்கல் எல்லாம்மே மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக இருக்கின்றன.

[8]நக்கீரன் சொல்வது, “இதில், 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்”,

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33934

[9] வேதபிரகாஷ், ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?, https://christianityindia.wordpress.com/2010/05/23/ஆர்ச்-பிஷப்-சின்னப்பா-தெ/

[10] செப்டம்பர் 23, 2008, திராவிடர் கழகம் தலைமையில் நடந்த போராட்டத்தில், இந்த கிருத்துவக் கூட்டமும் கலந்து கொண்டது.

http://www.tamilwin.com/view.php?2b4cQT54b3aT9CW24d3EWvj3a02l5GMe4d3YMpJce0df5LsCce0dc2fv2cc0XjYk3e

[11] முன்னால் ஒருவரை நிறுத்தி, பின்னால் மறைந்திருந்து செயல்படுவது, அதிகாரத்தை உபயோகப்படுத்துவது, மணத்தைக் கொடுப்பது, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்வது……………….

[12] ஆச்சார்ய பால் என்ற கிருத்துவர், 1985-87 ஆண்டுகளில் ஆர்ச் பிஷப் அருளப்பாவோடு சேர்ந்து, பல போலி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, விஷயங்கள் வெளிவந்துள்ளன. இருவரும் வாடிகனுக்குச் சென்று, அப்பொழுதைய போப்பைப் பார்த்துவர, இப்பொழுதைய போப் – கார்டினல் ரட்ஸிங்கர்தான் உதவினாராம்!

[13] கத்தோலிக்க டையீஸிஸ் வளகத்தில் ஆகஸ்ட் 15-18 2008ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த ஆர்ச் பிஷப் சின்னப்பா, தெய்வநாயகத்தின் மாநாட்டை அல்லது இவர்களது மாநாட்டை எல்லோருமாக நடத்தினர்! மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எனது கட்டுரைகளைப் படிக்கவும்:

Thamizhar Samayam: A reply to the Christian protagonists and propagandists? http://vedaprakash.indiainteracts.in/2008/12/07/thamizhar-samayam-a-reply-to-the-christian-protagonists-and-propagandists/

“Religion of Tamizhar”: An International Conference is a camouflage or subversion of Hindus? http://vedaprakash.indiainteracts.in/2008/08/16/religion-of-tamizhar-an-international-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/

“The Religion of Tamils”: Vatican council – II and the implications http://vedaprakash.indiainteracts.in/2008/08/17/%E2%80%9Cthe-religion-of-tamils%E2%80%9D-vatican-council-%E2%80%93-ii-and-the-implications/

[14] தெய்வநாயகமே அன்று தமிழர் சமயம் மாநாட்டில் அவ்வாறு பேசியது, தெரிந்தவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

[15] நாம் தமிழர் இயக்கம் – அந்தோணி சைமன் ராஜா – 93808 88111, 97108 11266.

[16] வேதபிரகாஷ், ஆறாவது உலகக் கிருத்துவ தமிழ் மாநாடு, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும், https://christianityindia.wordpress.com/ஆறாவது-உலகக்-கிருத்து-த /

[17] நியூயார்க் மாநாட்டில், இருவரும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது – அதாவது, அவர்களது கட்டுரைகள், ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ளன.

[18] இதுவும் கிருத்துவர்களின் தூண்டுதல் பேரிலேயே உருவானது. கிருத்துவ பின்னணி தெரிந்து விடுமோ, என்று பயந்து பின்வாங்கிவிட்டனர்.

வேதபிரகாஷ், மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம்! https://christianityindia.wordpress.com/2010/06/14/மேரியைக்-கட்டிப்-பிடித்த/

[19] குற்றப்பத்திரிக்கை / டானின்ஸி கோட் – புத்தகம் / திரைப்படத்தில், இதற்கான விவரங்கள் உள்ளன.

[20] Francis X. Clooney, S.J, Seeing Through Texts – Doing Theology among the Srivaisnavas of South India,  State University of New York Press, Preface, pp.xx-xxi, 1996.

[21] Francis Xavier Clooney, Divine Mother, Blessed Mother: Hindu goddesses and the Virgin Mary, Oxford university Press, USA, 2005, p.214.

[22] Roberto de Nobili – ஒரு இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரி. போப்பிற்கு உறவினர். குடுமி வைத்துக் கொண்டு, பூணூல் போட்டுக் கொண்டு, காணாமல் போன “ஏசுர்வேதத்தை”த் தான் கண்டுபிடித்துக் கொண்டுள்ளதாகக் கூறி, மதுரையில் இந்துக்களை ஏமாற்றி வந்தான். இந்த ஆளுடைய தொல்லைத்தாங்காமல், சர்ச்சே நடவடிக்கை எடுத்தது, இவரது பதவியைப் பரித்தது. சென்னையிலேயே இறந்து எங்கேயோ அடக்கம் செய்யப்பட்டானாம்.

[23] சென்னைக்கு, இந்த பாதிரி குளூனி வந்தபோது, இந்துக்கள் சந்தித்து, அவரது நிலையப் பற்றி விசாரித்தனர். குளூனியும் தனது நிலையை விட்டுக் கொடுக்காமல், அழுத்தமாகவே அவர்களுடன் பேசியுள்ளான். எது எப்படியாகிலும், கிருத்துவர்கள் இப்படி, பல நிலைகளில் இந்துக்க்ளைத் தாக்கி வருகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

[24] “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

[25] New Indian express dated 03-05-2010. Now the clipping has been fremoved from gthe site without assigning any reason. As we have downloaded the copy, we have still with us, of course uploaded in our blogs also.

[26] ஈஸ்வர் ஷரண், வேதபிரகாஷ் முதலியோர் தமது கடிதங்கள் மூலம் பலமுறை எழுதி புகார் செய்துள்ளனர் – விவரங்களுக்கு இத்தளங்களைப் பார்க்கவும்:

http://hamsa.org/ ; http://apostlethomasindia.wordpress.com; http://the-st-thomas-teller.blogspot.com/

http://bharatabharati.wordpress.com ; https://christianityindia.wordpress.com

http://thomasmyth.wordpress.com; http://vedaprakash.indiainteracts.in

[27] Protestants who are critical of Catholicism often claim that Catholics have statues and images of Mary which they worship as idols by touching, kissing and other forms of worship.

http://www.northforest.org/CatholicApologetics/MaryDoctrines.html#worshipmary

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான், நெடுமாறன்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன? (2)”

  1. M. Nachiappan Says:

    தெய்வநாயகத்திற்கு தைரியம் இருந்தால், இங்கு வந்து விவாதத்தில் கலந்து கொள்ளலாம்.

    • vedaprakash Says:

      நிச்சயமாக, அறிவு பூர்வமான விவாதத்திற்கு அஞ்சத்தேவையில்லை. தாராளமாகக் கலந்து கொள்ளலாம். என்ன வினா கேட்டாலும் ஆதாரத்துடன் பதில் சொல்லப்படும்.

  2. K. Venkatraman Says:

    You must remember that last month itself, I pointed out about the unethical, mischevous and wanton role played by G. Babu Jayakumar, the worst fundamentalist and fanatic Christian working in the editorial section of NIE.

    He knows many bishops, evangelists and priests and they entertain him frequently. Thus, he has been so happy to carry such stuff in the NIE regularly.

    A Google search would expose his activities. He was working with Newstoday, where he used to be found with several girls with whom he used to sermon about Christianity. He also used to quarrel with with fellow-colegues there, because of his extreme views.

    He has been psychopathic fellow, becomes tense, when he becomes emotional, starts stammering and shouting, leading to hysterical.

    Manytimes, he wants to alone.

    • vedaprakash Says:

      Thank you very much.

      Indeed, yesterday evening, I had talked with him through phone – 2345 7601 – and I have briefly given my interaction that I had with him in a subsequent posting.

      He has accepted that the report appearing in the NIE dated 03-05-2010 “was a mistake” and put blame on sub-editor one Suresh Sundaram.

      Kindly check up, if possible.

      Definitely, he has some emotional problem.

      I pray God for his health and prosperity.

  3. vedaprakash Says:

    யார் இந்த பாவலர் ராமச்சந்திரன்?

    சோனியா வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 220 பேர் கைது – May 11, 2009

    தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று மாலை தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன், பாரதிராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சென்னையில் நடைபெற்ற கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களில் 220 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

  4. Mahesh Says:

    Sir,

    On the “02-05-2010 I had personally visited Egmore and watched the farcial fast and was given the free copy of the book issue Tamilar Samayam enra Dravida Samayam. There were hardly 10-15 people and Biriyani pockets were freely distributed in the back.

    Few Hindus from http://www.tamilhindu.com visited the Tamilar Conference conducted by Arch Bishop and distributed leaflets that the whole concept was wrong.
    சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
    http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

    Till date neither Church nor Deivanayagam has responded.

  5. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

    […] [15]https://christianityindia.wordpress.com/2010/06/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%… […]

  6. செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் Says:

    […] [15]https://christianityindia.wordpress.com/2010/06/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: