கடற்கரையை ஆக்கிரமிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள்…..

கடற்கரையை ஆக்கிரமிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள்…..

தனுஷ்கோடியில் அனுமதியின்றி கட்டடம் : விசாரணை

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7641

ராமேஸ்வரம் (27-05-2010) : தனுஷ்கோடியில் அனுமதியின்றி பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தனுஷ்கோடியில் 1964 புயலுக்குப்பின் நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு அரசின் தடை இருப்பதால், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ்கோடியில் 20 அடி அகலம், 40 அடி நீளத்தில் குறிப்பிட்ட மதத்தின் பெயரில் பிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் சிமென்ட் சுவர், மேலே சிமென்ட் ஓடும் வேயப்பட்டுள்ளது. எவ்வித அனுமதியுமின்றி கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றகோரி, இப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் மூன்று மாதங்களுக்கு முன் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தனுஷ்கோடி-கிருத்துவர்-ஆக்கிரமிப்பு-2010

தனுஷ்கோடி-கிருத்துவர்-ஆக்கிரமிப்பு-2010

தனுஷ்கோடியில் பிரார்த்தனை மண்டபம் அகற்றம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8253

ராமேஸ்வரம் (28-05-2010) : தனுஷ்கோடியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். தனுஷ்கோடியில் கட்டப்பட்ட குறிப்பிட்ட மதத்தின் பிரார்த்தனை மண்டபத்தை , ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் பார்வையிட்டு, கட்டடம் கட்டிய ஜோஸ்வா என்பவரிடம் விசாரணை செய்தார். இன்று காலை 10 மணிக்குள் பிரார்த்தனை மண்டபத்தை தாங்களாகவே இடித்து விடுவதாக கூறிய ஜோஸ்வா, மதியம் வரை அகற்றவில்லை. இதை தொடர்ந்து நாகநாதன் வி.ஏ.ஓ., தலைமையில் தனுஷ்கோடி சென்ற வருவாய்த்துறையினர் , போலீசார் பாதுகாப்புடன் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தினர். கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பாம்பன் அக்காள் மடம் அரைஸ் அன்டு பியுல்டு சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் நிர்வாகி ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தனுஷ்கோடி போலீசில் வி.ஏ.ஓ., புகார் செய்தார்.

இதே மாதிரி, கீழக்கரை, வேதாரண்யம் முதலிய கடற்கரை பகுதிகளில், முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கீழக்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தல் நடப்பது சகஜமானது. முஸ்லீம்கள், கடர்கரையை ஆக்கிரமித்து, குடிசைகள் போட்டுள்ள இடங்களில் நுழைவது பிரச்சினையானது, ஏனனில், அவர்கள் உடனடியாக, அனுமதிக்கமாட்டார்கள். அப்படி, நேரம் கடத்தும் வேலையில், குருவிகள், புலிகள், முதலியன தப்பித்துவிடும்.

சர்வதேச கடத்தல் தளமாக மாறும் தமிழக கடல் பகுதி
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6085

Front page news and headlines today

ராமேஸ்வரம் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, கடல் வாழ் உயிரினமான, கடல் அட்டை கடத்தலில், சர்வதேச கடத்தல் தளமாக, தமிழக கடல்பகுதிகள் மாறுவதை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல்வாழ் உயிரனங்கள் கடத்தல்: அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் மருந்து, உணவாக பலநாடுகளில் பயன்படுவதால், இங்கிருந்து பல்வேறு வகையில் கடத்தி செல்லப்படுகிறது. இதுபோல் தடை செய்யப்பட்ட கடல் சிப்பி, சங்கு வகைகளும் வெளிநாடுகளில் இருந்து, இங்கு கடத்தி வரப்படுகிறது. கடல் குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை போன்றவை, இவ்வகை கடத்தலில் முதலிடம் வகிக்கிறது. கடல் அட்டைகள், ஆண்மை விருத்திக்கு மருந் தாக கருதப்படுவதால், மலேசியா, ஜப்பான் போன்ற பல நாடுகளில், இதை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். கடல் அட்டைகளுக்கு, இலங்கையில் தடையும் இல்லை என்பதால், இலங்கைக்கு கடத்திச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடல் அட்டைகள் கடத்தல்: இதனால், தமிழக கடலோர பகுதிகளில், தடையின்றி டன் கணக்கில் கடத்தி செல் லப்படுகின்றன. மீனவர்களால் பிடித்து வரப்படும் கடல் அட்டைகள், கிலோ 500 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங் கப்படுகிறது. இதை வியாபாரிகள், ஏஜன்டுகளிடம் கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் அட்டைகள், ராமேஸ்வரம், கீழக்கரை, தூத்துக் குடி, கோடியக்கரை, காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளில் ரகசியமாக பதப்படுத்தப் பட்டு, படகில் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகின்றன. இலங்கையில், இந்திய மதிப்பில், கிலோ 5,000 ரூபாய்க்கு விலை போகிறது. வெளிநாடுகளில், இதன் விலை பன்மடங்கு என்பதால், சத்தமில்லாமல் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் கடல் அட்டை கடத்தலில் பலரும் ஈடுபடுகின்றனர்.

இதன் கடத்தலில் ஈடுபட்ட, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 30 க்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தும், முறையான நடவடிக்கை இல்லை. இதனால், கடத்தலில் பலரும் முனைப்புடன் ஈடுபடுவதாக, புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், “நெட் ஒர்க்’ அமைத்து சர்வதேச அளவில், கடத்தல் தொழிலை விரிவுபடுத்தியும் வருகின்றனர். இந்திய கடற்படை உட்பட அனைத்து ஏஜன்சிகளும், 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டாலும், கடல் அட்டை கடத்தலும் தொடர்கிறது.தமிழக கடல் பகுதிகள், சர்வதேச கடல்அட்டை கடத்தல் சந்தையாக மாறுவதை தடுக்க, கடலோர பாதுகாப்பில், “ஹோமிங் ஆபரேஷன்’ நடத்தினால் மட்டும் போதாது, தீவிர நடவடிக்கை தேவை என்பதையும் அரசு உணர வேண்டும்.

கீழக்கரையில் ஆயுதங்கள் பரிமுதல்: ஆகஸ்ட், 2008ல், சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட வாக்கிடாக்கிகள், 10 ஜிபிஎஸ் கருவிகள், பாட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையில் கடந்த 30ந் தேதி  இலங்கையைச் சேர்ந்த விஜயநீதன் என்ற நிக்ஸன் மற்றும் 3 பேர் கீழக்கரை அருகே உள்ள உப்பூர் என்ற இடத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

குறிச்சொற்கள்: , , ,

ஒரு பதில் to “கடற்கரையை ஆக்கிரமிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள்…..”

  1. M. Nachiappan Says:

    கடற்கரைப் பட்டினங்களில் தான், இவர்களுக்கு எல்லா வேலைகளும், போக்குவரத்துகளும் நடக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: