குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள், உதவிய பெண்கள் கைது

குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம்: புதுச்சேரியில் ஒரு பெண் கைது; குழந்தைகள் மீட்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=12079

பாதிரியார்களுக்கு உதவிய பெண்கள் கைது: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய கும்பலிடமிருந்து, மேலும் நான்கு குழந்தைகளை தனிப்படை போலீசார்  மீட்டனர். இது தொடர்பாக, புதுச்சேரி மனித உரிமை கழக தலைவியை கைது செய்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து, மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய  தனலட்சுமி (35) மற்றும் கடத்தலில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், பாதிரியார் செல்வம் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு குழந்தைகளையும் மீட்டு, பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தி விற்பனை செய்த  இந்த கும்பல், மேலும் பல குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பிருக்கும் என போலீசார் சந்தேகமடைந்து, தனலட்சுமி, கிரிஜாவை,காவலில் எடுத்து விசாரித்தனர்

குழந்தைகள் மீட்பு: கிருஷ்ணகிரியிலிருந்து மேலும் மூன்று குழந்தைகளை கடத்தி, புதுச்சேரி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில், விற்பனை செய்ததாக கிரிஜா தெரிவித்தார். பண்ருட்டி பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார், கிரிஜா மூலம் விற்பனை செய்யப்பட்ட ஒன்றரை வயது உடைய இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் 40 நாள் ஆன ஒரு பெண் குழந்தையை மீட்டு, குழந்தைகளை வளர்த்து வந்த பெற்றோரை, விசாரணைக்காக கிருஷ்ணகிரி அழைத்து வந்துள்ளனர். கிரிஜாவிடம் போலீசார் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளதால், அவருக்கு மேலும் இரண்டு நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிஜாவிடம் நேற்று நடத்திய விசாரணையில்,  புதுச்சேரி முத்தையால் பேட்டையை சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழக  தலைவி லலிதா (34) என்பவரும் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில்  கடத்தப்பட்ட மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை, லலிதாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருவது தெரிந்தது. அந்த குழந்தைகளையும் போலீசார் மீட்டு வந்துள்ளனர்.  இதுவரை ஐந்து ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் என மொத்தம் ஒன்பது குழந்தைகளை போலீசார் மீட்டனர். இதில், இரு குழந்தைகள் மட்டுமே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற ஏழு குழந்தைகளின் பெற்றோர் யார் என்று தெரியாத நிலையில், போலீசார் கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் மாயமான குழந்தைகளை பற்றிய கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=8797

கிருஷ்ணகிரி : தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதிகளில் அதிகளவில் குழந்தைகள் காணாமல் போவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ராமாத்தாள் என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த தனலட்சுமி என்ற பெண், குழந்தையை தான் வைத்திருப்பதாகவும், குழந்தைக்கு கடையில் பிஸ்கெட் வாங்கிக் கொடுக்குமாறும் தெரிவித்துள்ளார். ராமாத்தாளும் குழந்தையை தனலட்சுமியிடம் ‌கொடுத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த பார்த்த போது தனலட்சுமி மாயமாகி இருந்தார்.இது தொடர்பாக ராமாத்தாள் அளித்த புகாரின் பேரில் தனலட்சுமி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை  தலைமையிடமாகக் கொண்டு குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிய வந்தது. மேலும் 2 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த பாதிரியார் அல்போன்சாவும், திண்டிவனத்தைச் சேர்ந்த பாதிரியார் செல்வமும் தான் இந்த கடத்தல் கும்பலின் தலைவர்கள் என்பது தெரியவந்தது. தற்போது பாதிரியார்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கிருத்துவ பாதிரிகளின் அட்டூழியம்: மனித உரிமைகள் போர்வையில் குழந்தைகள் கடத்தல், பெண்கள் உரிமைகள் பெயரில் விபச்சாரம், ராஜரிக்கக் கட்சி பெயரில் ராசலீலைகள்,…………………..எப்படி, இவர்கள் தொடர்ர்ச்சியாக இத்தகைய குற்றங்களை செய்து வர முடிகிறது?

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “குழந்தைகளை கடத்திய பாதிரியார்கள், உதவிய பெண்கள் கைது”

 1. vedaprakash Says:

  காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க வீடுகள், மருத்துவமனைகளில் கணக்கெடுப்பு
  பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:54 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13881

  கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, ஒரு ஆண்டுக்கு முன் கிராம சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் குறித்து கிராம செவிலியர்கள் மூலம் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவனை கடத்திய கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த தனலட்சுமி(35) மற்றும் கடத்தலில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடருந்து கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளையும் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

  குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த பாதிரியார் செல்வம்(44), கடத்தல் கும்பலிடம் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்த புதுச்சேரி மாநில மனித உரிமை அமைப்பின் தலைவி லலிதா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நான்கு குழந்தைகளை மீட்டனர்.

  போலீசார், கடத்தல் கும்பலிடம் இருந்து இதுவரை எட்டு குழந்தைகளை மீட்டு, மூன்று குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மீதி ஐந்து குழந்தைகளின் பெற்றோர்கள் தெரியாத நிலையில், அவர்களை வளர்த்து வந்தவர்களிடமே நீதிமன்றம் மூலம் ஒப்படைத்தனர்.

  குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த புதுச்சேரி லலிதா, சென்னை மற்றும் பல மாநிலங்களில் முக்கிய பிரமுகர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு பல குழந்தைகளை அங்கு விற்பனை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சாதாரண நிலையில் இருந்த லலிதா, திடீரென்று கோடீஸ்வரியாக மாறியுள்ளார். இதற்கு குழந்தை கடத்தல் விற்பனை முக்கிய காரணமாக இருக்கும் என்பதால், அவருடன் தொடர்புடைய மனித உரிமை கழக அமைப்பினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லலிதாவை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர். லலிதாவிடம் விசாரணை மேற்கொண்டால், குழந்தை கடத்தலில் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிக குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதால் கிராம சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், வீடுகள் ஆகியவற்றில் கடந்த ஒரு ஆண்டில் பிரசவித்த குழந்தைகள் பற்றிய விவரங்களை கிராம செவிலியர்கள் மூலம் போலீசார் சேகரிக்க துவங்கியுள்ளனர். கணக்கெடுப்பின் முடிவில், காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை தெரியவரும் என போலீசார் கூறினர்.

 2. vedaprakash Says:

  குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலின் தலைவி லலிதா குறித்து பரபரப்புத் தகவல்கள்
  திங்கள்கிழமை, ஜூன் 7, 2010, 11:31[IST]
  http://thatstamil.oneindia.in/news/2010/06/07/child-abduction-gang-leader-lalitha.html

  கிருஷ்ணகிரி: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பல பெண்களுக்குத் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலின் தலைவியாக புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய மனித உரிமைகள் கழகத்தின் தலைவியான லலிதாதான் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

  குழந்தை கடத்தல் விவகாரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த தனலட்சுமி (35), சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா (45), அவரது கணவரான ஆட்டோ டிரைவர் சிவா (48), அதே பகுதியை சேர்ந்த ராணி (48) மத போதகர்களான சென்னை அல்போன்ஸ் சேவியர், திண்டிவனம் செல்வம் (44), லலிதா (34) ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 3 பெண், 5 ஆண் குழந்தை களை தனிப்படை போலீசார் மீட்டனர். நீதிமன்ற அறிவுரையின்படி ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள 5 குழந்தைகளின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் வரை குழந்தைகள் தற்போது வளர்த்து வருபவர்களிடமே தொடர்ந்து இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  முன்னதாக பிடிபட்ட கிரிஜாவை 2 முறை போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அப்போது லலிதா குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுச்சேரிக்கு விரைந்த போலீஸார் லலிதாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

  கிரிஜா கடத்தி வந்த குழந்தைகளை லலிதாவிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து லலிதா மூலம் விற்கப்பட்ட 4 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.

  கும்பலின் தலைவி லலிதா…

  லலிதாதான், இந்தக் கும்பலின் தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார். மனித உரிமை அமைப்பின் தலைவி என்ற போர்வையில் அவர் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு குழந்தைகளை கடத்தி தந்தவர்கள்தான் கிரிஜா, தனலட்சுமி. இவர்கள் குழந்தைகளை கடத்தி ரூ.20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை விற்றுள்ளனர். இதன் மூலம் லலிதாவிற்கு பணம் குவிந்துள்ளது.

  8வது படித்தவருக்கு கோடிக்கணக்கில் சொத்து

  8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். புதுச்சேரியில் புதிதாக கல்யாண மண்டபம் ஒன்றையும் கட்டி வருகிறார். கிரிஜா தவிர தமிழகத்தில் மற்ற குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

  பெங்களூரில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை அதிக விலைக்கு விற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தனக்கு உள்ள தொடர்புகளை வைத்து பிரான்ஸ், போன்ற வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தி விற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். காரணம் லலிதாவின் சொத்து மதிப்பை பார்க்கும் போது அவர், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை விற்று கோடி, கோடியாய் பணம் சம்பாதித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  லலிதாவை போலீஸ் காவலில் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை அல்லது மறுநாள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் லலிதா பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

  குழந்தை கடத்தலுக்கு ஆள் வைத்தது போல, குழந்தையை விற்கவும் அவர் ஆட்கள் வைத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே அவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 3. vedaprakash Says:

  கடத்தல் கும்பலிடம் மீட்கப்பட்டகுழந்தைகள் கோர்ட்டில் ஆஜர்
  பதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:10 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14557

  கிருஷ்ணகிரி: குழந்தை கடத்தல் கும்பலிடம் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட ஐந்து குழந்தைகளின் பாதுகாவலர்கள், குழந்தைகளுடன் நேற்று கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜராகினர். “நீதிமன்றம் உத்தரவிடும் போது, குழந்தைகளுடன் கோர்ட்டில் மீண்டும் ஆஜராக வேண்டும்’ என, நீதிபதி உத்தரவிட்டார்.

  கிருஷ்ணகிரியில் குழந்தைகள் கடத்தப்பட்ட வழக்கில், தனலட்சுமி (35), கிரிஜா, சிவா, ராணி, பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், பாதிரியார் செல்வம், லலிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கடத்தல் கும்பலிடம் இருந்து எட்டு குழந்தைகளை மீட்ட போலீசார், மூன்று குழந்தைகளின் பெற்றோரை அடையாளம் கண்டு, அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர்.ஐந்து குழந்தைகளின் பெற்றோர் யார் என தெரியாத நிலையில், அவர்களை வளர்த்து வந்தவர்களை, கோர்ட் மூலம் பாதுகாவலர்களாக நியமித்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.நேற்று அவர்கள், குழந்தைகளுடன், கோர்ட்டில் ஆஜராகினர்.”குழந்தைகளின் பெற்றோர் கிடைக்கும் வரை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டவர்கள் குழந்தைகளை வளர்த்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது அழைத்தால் குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்’ என, நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டார்.

  பாதுகாவலர்கள் கூறியதாவது:எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தைகளை தத்தெடுக்க விரும்பினோம். புதுச்சேரியில் லலிதா என்பவர் நடத்தி வரும், “வித்யா அன்னையின் கரங்கள்’ என்ற தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளை தத்தெடுக்க அணுகினோம்.தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த லலிதா, “இரண்டு மூன்று குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர், அடுத்ததாக பிறக்கும் குழந்தைகளை வளர்க்க போதிய வசதி இல்லாத காரணத்தால், தொண்டு நிறுவனத்தில் குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர்’ என, கூறினார்.குழந்தைகளின் பெற்றோர், முழு சம்மதத்துடன் குழந்தைகளை தொண்டு நிறுவனத்தில் விட்டுச் சென்றுள்ளதாகவும், தத்தெடுப்பதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என கூறினர். பெற்றோருக்கு கொடுப்பதாகக் கூறி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்ச ரூபாய் வரை எங்களிடம் லலிதா பணம் வாங்கினார்.

  கடத்தப்பட்ட குழந்தைகள் என்று தெரிந்திருந்தால், நாங்கள் குழந்தைகளை வாங்கியிருக்க மாட்டோம். எங்களிடம் உள்ளது கடத்தப்பட்ட குழந்தை என்பது தெரியவந்தும், குழந்தைகளை ஒப்படைக்க மனமில்லாமல் உள்ளோம். இருப்பினும் பெற்றோர் உரிமை கொண்டாடி வந்தால், குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.லலிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்யப்பட்டுள்ளது. லலிதாவிடம் விசாரித்தால், எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டன என்ற விவரம் தெரியவரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: