ஆறாவது உலகக் கிருத்துவ தமிழ் மாநாடு!

ஆறாவது உலகக் கிருத்துவ தமிழ் மாநாடு

கருணாநிதி கிருத்துவர்களின் தமிழ்த் தொண்டினைப் புகழ்ந்ததாக கீதா ஜீவன் கூறினார்!

— PHOTO COUETESY – The Hindu; : R.M. RAJARATHINAM.

கீதா ஜீவன், திருச்சி பிஷப் பால் வசந்தகுமார் எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட, பிரதியை என். சிவா, திமுக எம்.பி பெறுகிறார்.

[அடைப்புகளில் உள்ளவை எனது விமர்சனம் ஆகும்]

தமிழகத்தில், ஏன் மற்றும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிஷப்புகள், பாதிரியார்கள், பாஸ்டர்கள் செக்ஸ், கற்பழிப்பு, கோடிக்கணக்கில் பணம் கொள்ளை, கையாடல், போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, இப்படி ஒரு மாநாடு திருச்சியில் நடப்பது ஆச்சரியமே.

பிஷப் ஹெப்பர் கல்லூரியில் மே 21 முதல் 23 வரை இந்த மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொள்ள கிருத்துவர்களிடையே  கருத்து வேற்றுமை, உட்பூசல்கள் இருந்ததால், சில கோஷ்டிகள் இம்மாநாட்டைத் தவிர்த்தன. குறிப்பாக சென்னையில் கருணாநிதியுடன் உலா வரும் பிஷப்புகள், பாதிரிகள், சர்ச்-ஆராய்ச்சியாளர்கள் முதலியோர் காணப்படவில்லை. பல விஷயங்கள் அமைதியாகவே அடக்கி வாசிக்கப் பட்டன. ஆய்வுக்க்கட்டுரைகள் கூட முன்னமே பெறப்பட்டு, தமக்குச் சாதகாமாக உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு பிரபாகரன் என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உலக கிறிஸ்தவ தமிழ் பேரவை சார்பில், தென்னிந்திய திருச்சபை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவை சார்பில் ஆறாவது உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை  (23-05-2010) நடந்தது. தென்னிந்திய திருச்சபை திருச்சி- தஞ்சை திருமண்டல பேராயர் பால்வசந்தகுமார் தலைமை வகித்தார். மாநாட்டில், சிறந்த தமிழ்ச்சேவைக்காக, தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகளுக்கு கிறித்தவ இலக்கிய காவலர், மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரத்திற்கு அருளுரை செம்மல், சென்னை பாகவதர் கிளமென்ட் வேதநாயகம் சாஸ்திரியாருக்கு அருளிசை மாமணி, மலேசியாவை சேர்ந்த முனைவர் செல்லத்துரைக்கு அருள் தமிழ்மாமணி விருதுகளை, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வழங்கினார். மாநாட்டை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு லில்லி வசந்தகுமார் பரிசு வழங்கினார்.

தமிழ்ச் செம்மொழி என்பதை முதலில் அறிவித்தவர்கள் கிறிஸ்தவ போதகர்களே
First Published : 22 May 2010 10:53:13 AM IST

பொன்னவைக்கோ போட்ட போடு:  ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொன்னவைக்கோ அங்கு வந்தது ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் அவர் பேசியது வேடிக்கையாக இருந்தது. திருச்சி, மே 21, 2010: தமிழ்ச் செம்மொழி என்பதை முதல் முதலில் உலகறியச் செய்தவர்கள் கிறிஸ்தவப் போதகர்கள்தான் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.  திருச்சியில் உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, தென்னிந்தியத் திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டலம், பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவை சார்பில் வெள்ளிக்கிழமை (21-05-2010) நடைபெற்ற ஆறாம் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசியது:

சீகன் பால்கு, பெஸ்கி, போப் பற்றிய கதைகள்: “ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்குக் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த பேராயர்கள்தான் தமிழர்கள் யார்? என்ற உண்மையை அறியச் செய்தனர். {மதத்தைப் பரப்பத்தான் வந்தனர், தமிழைப் பரப்ப வரவில்லை என்று சொல்கிறாரோ என்னவோ?} கிறிஸ்தவப் பேராயர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.  பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீகன் பால்கு முதல் முதலில் 40,000 தமிழ்ச் சொல்களைத் தொகுத்து மொழி அகராதியை உருவாக்கினார். இறைவனால் மக்களுக்கு அருளப்பட்ட மொழித் தமிழ் என்பதை லண்டனில் உள்ள சபையில் தெரிவித்தார் சீகன் பால்கு [ஆனால் பிரச்சினையே எந்த இறைவன் என்றுதான். தமிழ் என்றால், தமிழ் நூல்களை அவன் ஏன் அழித்திருக்க வேந்தும், என்று  சொல்லவில்லை]. தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, வட மொழி போன்ற மொழிகளையும் கற்றவர் வீரமா முனிவர். இவர் வட மொழித் துணையின்றி தனித் தமிழ் நடையைக் கொண்டு வந்தவர். தன்னைத் தமிழ் மாணவர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டார் ஜி.யு. போப்.  தமிழ்ச் செம்மொழி, முதல் மொழி என்பதை உலகுக்கு அறிவித்தவர்கள் கிறிஸ்தவப் போதகர்கள்தான்.  கிறிஸ்தவப் பேராயர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மிகப் பெரியது. இந்தத் தொண்டு தொடர வேண்டும்’ என்றார் பொன்னவைக்கோ.

ஆறாவது கிருத்துவ மாநாடு திருச்சி மே 2010

ஆறாவது கிருத்துவ மாநாடு திருச்சி மே 2010

1981 ஆம் ஆண்டில் முதல் மாநாடு திருச்சியில் நடத்தப்பட்டது: விழாவுக்குத் தலைமை வகித்ததிருச்சி – தஞ்சை திருமண்டலப் பேராயர் ஞா. பால் வசந்தகுமார் பேசியது:  “இந்தப் பேரவை முதல் முதலில் தொடங்கப்பட்டது திருச்சியில்தான். கடந்த 1981 ஆம் ஆண்டில் முதல் மாநாடு திருச்சியில் நடத்தப்பட்டது. தற்போது, ஆறாவது மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது.   கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, இந்த மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சிக்குரியது.  இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைத் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான் கிறிஸ்தவ அருள் தொண்டர்கள் தமிழ்க் கற்றனர். அப்போதுதான், தமிழ் மொழியின் வளம், இலக்கியச் செறிவு, இலக்கணம் போன்றவற்றைக் கண்டு வியந்தனர்.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைத் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான் கிறிஸ்தவ அருள் தொண்டர்கள் தமிழ்க் கற்றனர். கேட்பர்கள் தவறுதலாகப் பரிந்துக் கொள்ளாக் கூடாது என்று, பால் வசந்தகுமார், இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைத் தமிழர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகத்தான் கிறிஸ்தவ அருள் தொண்டர்கள் தமிழ்க் கற்றனர், என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.  அதாவது மதத்தைப் பரப்பத்தான் கற்றார்களேத்தவிர தமிழின்மீதுள்ள பாசத்தாலோ, காதலாலோ இல்லை என்கிறார். இதைக்கேட்ட, பொன்னவைக்கொவும், சிவாவும் மற்றவர்களும் முழித்தது நன்றாகவே தெரிந்தது.

கருணநிதிக்குத் தெரிந்தால் என்ன சொல்வாரோ? தமிழ்ச் செம்மொழி என்பதை முதல் முதலில் உலகுக்குக் அறியச் செய்தவர் கிறிஸ்தவ அருள் தொண்டர் பேராயர் கார்டுவெல்.  வீரமா முனிவர்தான் திரு விவிலியம் மூலம் தமிழ் மொழியை முதல் முதலில் அச்சில் ஏற்றியவர். தமிழில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் கிறிஸ்தவ அருள் தொண்டர்களே’ என்றார் பால் வசந்தகுமார்.

கிருத்துவர்களாக மாறியதால் விருது பெற்றனராம்: டாக்டர் ஷேக் சின்னமௌலானாவின் பேரன் பால் ஷேக் சின்ன காசிமுக்கு அருளிசை மாமணி என்ற விருது வழங்கப்பட்டது.    கவிஞர் விசாலி கண்ணதாசன், பேரவையின் செயல் தலைவர் ப.ச. ஏசுதாசன் சிறப்புரையாற்றினர்.  தமிழ்ச் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைப் பேராயர் பேரருள்திரு. எச்.ஏ. மார்ட்டின், தனிநாயக அடிகள் இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகள், பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் ம. மார்கஸ் தீபன் பூமிநாதன் வரவேற்றார். பேரவையின் பொதுச் செயலர் மோசசு மைக்கேல் பாரடே நன்றி கூறினார்.

விசாலி கண்ணதாசன் சைவசித்தாந்தம் எல்லாம் படித்தாராம். ஆனால், இப்பொழுது கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

சிதைந்து வரும் சமுதாயத்தை சீர்செய்வோம் கிறிஸ்தவ மாநாட்டில் ராஜ்யசபா எம்.பி., பேச்சு: “சிதைந்து வரும் சமுதாயத்தை, தமிழின் துணை கொண்டு சீர்படுத்துவது நம்முடைய கடமை,” என்று ஆறாவது உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு நிறைவு விழாவில் ராஜ்யசபா எம்.பி., சிவா பேசினார்.

மாநாட்டில், ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது: கிறிஸ்தவ மாநில மாநாடாக இருந்தாலும், அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் வகையில், தமிழ் மொழி நம்மை ஒருங்கிணைத்துள்ளது பெருமையாக உள்ளது. தமிழை கிறிஸ்தவர்கள் அச்சு மொழியில் கொண்டு வந்தனர் என்று கூட்டத்தில் தெரிவித்தனர். அதை நீங்கள் செய்யாவிட்டாலும், ஏதாவது ஒரு விஞ்ஞானி செய்திருப்பார் [இப்படி சொன்னதும், பிஷப் மற்றும் மற்ற கிருத்துவர்களின் முகங்களில் ஈயாடவில்லை!]. ஆனால், மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளை தமிழகத்தில் அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர்ந்தது கிறிஸ்தவர்கள் தான் [பாவம், மருத்துவம், கல்வி கொடுக்க யாரும் இல்லை போலும்]. “தமிழ் இனி மெல்ல சாகும்’ என்கின்றனர். தமிழ் எந்த காலத்திலம் சாகாது. உலகத்தில் மொத்தம் ஆறாயிரம் மொழிகள். அதில், மூவாயிரம் மொழிகள் குறிப்பிடத்தக்கவை. 300 மொழிகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன. இவற்றில், தொன்மையானவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகள்தான்.

தமிழின் துணை கொண்டு சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும்: கிரேக்கம், லத்தீன் மொழிகள் வழக்கொழிந்து விட்டன. ஹீப்ருவின் நிலையும் அப்படிதான். சீனமொழி சித்திர வடிவில் உள்ளது. சமஸ்கிருதம் பேச்சு வடிவில் அல்லாமல், எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது. ஆனால், எழுத்து, இலக்கியம், இலக்கணம், பேச்சு ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் மொழி மட்டுமே உச்சநிலையில் உள்ளது. இந்து கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு நீதிமன்றத்தை நாடிய நிலையில், தேவாயலங்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்கு பலமுறை நன்றி தெரிவிக்கின்றோம். சமுதாயத்தில் தற்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்த்து வருகின்றன. நாட்டின் கலாச்சாரம், பண்பாடு நலிந்து கொண்டு வருகிறது. மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும். சிதைந்து வரும் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும். தமிழின் துணை கொண்டு அதை செய்வது நம்முடைய கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

வின்சர்ட் சர்ச்சில், கருணாநிதி: ராஜ்யசபா எம்.பி., சிவா பேசியபோது, “”இந்தியா மற்றும் தமிழகத்தில் பிறந்து, இங்கே மதிக்கப்படாத தொல்காப்பியர், புத்தர் போல பலர் உலகளவில் போற்றப்படுகின்றனர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்சன்ட் சர்ச்சிலும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் பாரதிதாசன் பல்கலையில் பி.எச்டி., ஆய்வு செய்து வருகிறேன். இருவரின் வாழ்க்கையும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப்போகின்றன,” என்றார்.

இங்கே தொல்காப்பியர் மதிக்கப் படவில்லையாம்: தொல்காப்பியர் இங்கே மதிக்கப் படவில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் சிவா. ஏற்கெனவே பெரியார் வசவு பாடியுள்ளார். மற்ற அறிவுஜீவிகளைக் கேட்கவே வேண்டாம், அவர் ஒரு “பார்ப்பனர்” என்று ஒதுக்கிவைத்து விட்டனர். கிருத்துவர்களோ, அவர் 7-9 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்கின்றனர். பாவம் தமிழ், தமிழாராய்ச்சி………..

தமிழ் கிருத்துவ இலக்கிய ஆராய்ச்சிற்காக ஒரு தனி நாற்காலி: பிஷப் பேசும்போது, செந்தமிழ் இலக்கியம் ஊக்குவிக்க ஆவண செய்வோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, இனி சர்ச்சுகளில் தூயத் தமிழையே உபயோகிப்பதாக முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தமிழ் கிருத்துவ இலக்கிய ஆராய்ச்சிற்காக ஒரு தனி நாற்காலியை ஏற்பத்தப் போவதாக கூறினார். பிஷப் ஹெப்பர் கல்லூரியில் உலகக் கிருத்துவ அகடெமி ஒன்று உருவாக்ப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “ஆறாவது உலகக் கிருத்துவ தமிழ் மாநாடு!”

 1. vedaprakash Says:

  Priority to welfare of minorities: Minister
  Monday, May 24, 2010
  http://www.thehindu.com/2010/05/24/stories/2010052458790300.htm

  CM is all praise for contributions made by Christians

  INFORMATIVE:Social Welfare Minister Geetha Jeevan who released a book on Tamil literature written by Rev. Paul Vasanthakumar, Bishop of CSI, Tiruchi-Thanjavur Diocese, in Tiruchi on Sunday. First copy was received by N. Siva, MP.

  TIRUCHI The State Government is according priority for the welfare of minority communities, said Geetha Jeevan, State Social Welfare Minister, here on Sunday.

  Delivering the valedictory address of the three-day sixth World Christian Tamil conference organised by the World Christian Tamil Academy and the Church of South India of Tiruchi-Thanjavur Diocese at Bishop Heber College here, the Minister said that the Chief Minister M. Karunanidhi is all praise for the contributions made by the Christian community for the Tamil language. She explained in detail the contributions made by Christian scholars and poets several centuries ago for the development of Tamil language and recalled the works of Veeramamamunivar, G.U. Pope and others.

  She said that a number of research articles by Christian Tamil scholars were received for the souvenir to be released at the World Tamil Classical Conference to be held in Coimbatore next month.

  The Minister pointed out that she was very happy that the conference had discussed several important issues for the development of Tamil language.

  The Minister presented awards to four Christian Tamil scholars for rendering yeoman service for the development of Tamil language at the conference. Bhagavathar Clement Vedanayagam Sastriyar of Chennai was presented with the “Arulisai Maamani” award, Ref. Fr. Amudan Adigal with “Christhuva Ilakkiya Kavalar” award, Dr. Gnanavaram of Madurai with “Arulurai Chemmal” award and Dr. Y.R. Chelladurai of Malaysia with “Arul Tamizh Maamani” award. CSI Bishop Paul Vasanthakumar and Bishop Esra Sargunam presented the awardees with a shawl and certificates respectively.

  Mrs. Geetha Jeevan also released a book on Tamil literature written by Rev. Paul Vasanthakumar, Bishop of CSI, Tiruchi-Thanjavur Diocese, and the first copy was received by N. Siva, MP.

  Mr. Siva in his address, spoke about the contributions made by Christian Tamil scholars to the development of Tamil language.

  The CSI Bishop who presided over the conference said that the conference had passed a resolution to extend full co-operation and support for the ensuing World Classical Tamil Conference to be held in Coimbatore next month and appreciated the Chief for his efforts to conduct the conference.

  He said that the conference had adopted a resolution to take special efforts for promoting the classical Tamil literature and also to adopt pure Tamil words in the prayers in the churches. The conference has decided to create a separate chair in the Bharathidasan University for research in Tamil Christian literature works and also establish a separate wing by the World Christian Tamil Academy in the Bishop Heber College library to enable the students and scholars to get all Christian Tamil literature works, etc.

 2. vedaprakash Says:

  Sixth World Christian Tamil Conference in Tiruchi from May 21
  Thu, 2010-05-20 00:38 — editor; From Gopal Ethiraj – Chennai
  Chennai, 20 May (Asiantribune.com):
  http://asiantribune.com/news/2010/05/20/sixth-world-christian-tamil-conference-tiruchi-may-21

  The global Tamil Christians are coming together to participate in a conference in Tiruchi from May 21. The sixth edition of World Christian Tamil Conference will be held for three days. It may be noted it is happening a month before the state-sponsored World Classical Tamil Conference in Coimbatore.

  Over 500 delegates, including scholars from US and Malaysia, are expected to participate. About 130 research papers would be presented during the three-day religious meet jointly sponsored by World Christian Academy and the Church of South India (CSI), Tiruchy-Tanjavur Diocese and the Bishop Heber College, diocese Bishop Rev G Paul Vasantha Kumar told media persons in Tiruchi yesterday.

  The fifth edition of the Word Tamil Christian Conference was held in New York in 1996. The present meet at Tiruchi was being held after a gap of 14 years, he said.

  Union Minister for IT and Communication A Raja and Tamil Nadu Ministers K N Nehru, N Selvaraj and Geetha Jeevan would attend the conference, Paul said.

  A book exhibition would be arranged by Christian Literary Association on the side lines of the conference, he added

  – Asian Tribune –

 3. vedaprakash Says:

  Role of Christian missionaries in popularising Tamil literature hailed
  Saturday, May 22, 2010
  http://www.hindu.com/2010/05/22/stories/2010052263710700.htm

  TIRUCHI: Christian missionaries who came to Tamil Nadu played a crucial role in not only popularising Tamil literature all over the world but also in opening up new avenues in the literary style.

  The glory of Tamil language reached greater heights through their efforts, observed speakers at the inaugural of the three-day World Christian Tamil Conference, organised jointly by the World Christian Tamil Academy, Church of South India (CSI) Tiruchi – Thanjavur Diocese and the Bishop Heber College here on Friday.

  Rev. G. Paul Vasanthakumar, CSI Bishop, specifically referred to the contribution by Veeramamunivar. His work ‘Thembavani’ was a treasure to Tamil literature. Veeramamunivar was crucial in bringing about a new style of prose in Tamil literature.

  M. Ponnavaikko, Vice-Chancellor of Bharathidasan University, traced the glory of Christian Tamil literature. He said that the missionaries played a pivotal role in printing Tamil literature, taking advantage of the printing press. Tamil was the root language for several foreign countries. The conference should throw light on services rendered by missionaries in the order of G.U. Pope in translating Tamil literary and religious works into English.

  P.S. Esudasan, working president of the academy, Rev. H.A. Martin, Bishop, TELC; M. Marcus Deepan Boominathan, Principal of Bishop Heber College; Kavignar Amudan and Vaishali Kannadasan were among those who spoke.

  Earlier, nagaswaram artiste Paul Sheik Chinna Kasim was honoured with a title ‘Arulisai Maamani.’

 4. vedaprakash Says:

  திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு மே 21 முதல் 23 வரை நடத்த ஏற்பாடு மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
  மே 12,2010,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24946

  திருச்சி: ‘திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு நடக்கிறது’ என, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச்சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் கூறினர்.

  இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கிறிஸ்தவ இலக்கியத்தைக் கற்பிக்க, கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, அதை உலககெங்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் திருச்சியில் நிறுவப்பட்டது.

  முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடந்தது.ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, பிஷப் ஹீபர் கல்லூரியில் மே 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் நடக்கிறது.

  துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி., சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத்தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.கிறிஸ்தவ தமிழ் மாநாடாக இருந்தாலும், அனைத்து மதத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும், அமெரிக்கா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த கிறிஸ்தவ தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

  திருச்சபையில் கிறிஸ்தவ இலக்கியங்களின் படைப்பாற்றல் குறித்தும், பழைய நூற்றாண்டுகளில் கருத்துச் செறிவுமிக்க பல இலக்கிய நுணுக்கங்களை ஆராயவும் இம்மாநாடு உறுதுணையாக இருக்கும். மாநாட்டில், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

  சென்னை ஆசியவியல் பள்ளி நிறுவனர் ஜான்சாமுவேல், திருச்சி இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகள், மதுரை இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம், பாகவதர் கிளமென்ட் வேதநாயகம் சாஸ்திரியார், நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா பேரன் பால்ஷேக் சின்னகாசிம், மலேசியா கிறிஸ்தவ தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் செல்லத்துரை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும்.

  கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது. தென்னிந்திய, கத்தோலிக்க, தமிழ்நாடு லூத்தரன் திருச்சபை இணைந்து, பாரதிதாசன் பல்கலையில் கிறிஸ்தவ தமிழ் குறித்த பாடத்திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 5. vedaprakash Says:

  திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு மே 21 முதல் 23 வரை நடத்த ஏற்பாடு மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
  மே 12,2010,00:00 IST
  http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24946

  திருச்சி: ‘திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு நடக்கிறது’ என, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச்சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் கூறினர்.

  இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கிறிஸ்தவ இலக்கியத்தைக் கற்பிக்க, கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, அதை உலககெங்கும் எடுத்துச் செல்லும் நோக்குடன் உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் திருச்சியில் நிறுவப்பட்டது.

  முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடந்தது.ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, பிஷப் ஹீபர் கல்லூரியில் மே 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் நடக்கிறது.

  துவக்கவிழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி., சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத்தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.கிறிஸ்தவ தமிழ் மாநாடாக இருந்தாலும், அனைத்து மதத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும், அமெரிக்கா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த கிறிஸ்தவ தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

  திருச்சபையில் கிறிஸ்தவ இலக்கியங்களின் படைப்பாற்றல் குறித்தும், பழைய நூற்றாண்டுகளில் கருத்துச் செறிவுமிக்க பல இலக்கிய நுணுக்கங்களை ஆராயவும் இம்மாநாடு உறுதுணையாக இருக்கும். மாநாட்டில், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

  சென்னை ஆசியவியல் பள்ளி நிறுவனர் ஜான்சாமுவேல், திருச்சி இதழியல் கல்லூரி முதல்வர் அமுதன் அடிகள், மதுரை இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம், பாகவதர் கிளமென்ட் வேதநாயகம் சாஸ்திரியார், நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா பேரன் பால்ஷேக் சின்னகாசிம், மலேசியா கிறிஸ்தவ தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் செல்லத்துரை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும்.

  கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது. தென்னிந்திய, கத்தோலிக்க, தமிழ்நாடு லூத்தரன் திருச்சபை இணைந்து, பாரதிதாசன் பல்கலையில் கிறிஸ்தவ தமிழ் குறித்த பாடத்திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

 6. M. Nachiappan Says:

  இது புரொடஸ்டன்டு கிருத்துவர்களின் மாநாடு ஆதலால், கத்தோலிக்கர்கள் புறக்கணித்துள்ளது தெரிகிறது.

  இருப்பினும் நியூயார்க்கில் நடந்த மாநாட்டில், இரண்டு கோஷ்டிகளும் கலந்து கொண்டுள்ளது.

  ஜான் சாமுவேல் இங்கிருந்ததை, தாங்கள் குறிப்பிடவில்லை.

 7. unmai Says:

  The respondent has been perhapd annoyed about the coverage of such conference.

  However, his balanced comments may be invited.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: