உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடும், செம்மொழி மாநாடும், சமயமும், நாத்திகமும்!

மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
புதன்கிழமை, மே 12, 2010, 12:14
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/0512-world-christian-conference-trichy.html

திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது. ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்து சமயத்தைப் புறகணித்து விட்டு, இப்படி மந்திரி பட்டாளங்கள் கூடுவதின் மர்மம் என்ன? இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா [கோடிகளை அள்ளியவர், சர்ர்சையில் உள்ளவர்], தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் [கிருத்துவர், கேட்கவே வேண்டாம்], ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ [ஊழல் விவகாரம்], வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் [சும்மா, அந்த செக்யூலரிஸ வேடம் போடுவதற்கு] உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இது ஒரு பெரிய செக்யூலார் மோசடி மாநாடு என்பது, அந்த கூட்டு, அழைக்கப்பட்டுள்ள நபர்கள், பெர்யர்கள், அவர்களின் பெயர்கள் எல்லாமே எடுத்துக் காட்டுகின்றன.

செவ்வியகாலத்தில் ஏது கிருத்துவ தமிழ்? இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆனால், செவ்வியகாலம் என்று குறிப்பிட்டு, அதில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் இலக்கியங்களே வராதபோது, எங்கிருந்து வந்தது கிருத்திவத் தமிழ் இலக்கியம்?

மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.

ஆஹா, இங்குதான் சூழ்ச்சி வெளிப்படுகிறது, நாத்திகம் பேசி, இந்து மதத்தைப் புறக்கணித்து விட்டு, கிருத்துவம் மட்டும், திருட்டுத் தனமாகப் புகப் பார்க்கின்றதோ? இதற்குதான் அந்த கோடிகள் கொள்ளையடித்த ராஜாவும் வரவேண்டுமா? சமயமே இல்லை என்ற பிறகு, எதற்கு, கிருத்துவத்திற்கு தனி இடம்?

முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.

குறிப்பிடத் தக்கது தான், ஆனால், சரித்திர ரீதியில் இல்லாமல், பொய்களை வைத்தே, அம்மாநாடுகள் நடந்துள்ளது, அதன் தொகுப்புகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எடுத்துக் காட்டுகின்றன.

அத்தகைய போக்கு, “தமிழ்” என்ற பெயரில் தொடர்வது, தமிழிற்கே செய்யும் துரோகம் ஆகும்.

இத்தகைய மோசடிகளை செய்வதைவிட,  வெளிப்படையாக, நடப்பது நாத்திக செம்மொழி மாநாடு அல்லது இந்து விரோத செம்மொழி மாநாடு என்று அறிவித்துவிட்டு, நடத்திவிடலாம்!

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: