கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?

கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?

சகாய ஜார்ஜின் புகார்: பெண்டாட்டி காணவில்லை என்றாலும், நித்யானந்தாதான் பிடித்துக் கொண்டு போயிருக்கலாம் என்ற அளவிற்கு கேவலமாக மனைவியர் இருக்கிறார்களா, அல்லது கணவன்மார்கள் அந்த அளவிற்கு லாயக்கற்றவர்களா……………………………..என்னதான் நடக்கிறது?
ஜார்ஜ் விளம்பரத்திற்காக புகார் கொடுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? எந்த கணவனாவது, என் மனைவியை மீட்டுத்தாருங்கள், அவளை நித்யானந்தா பிடித்து வைத்துள்ளார், ஓஷோ மணியுடன் சென்று விட்டாள் என்றெல்லாம் புகார் கூறுவார்களா? ஆக, இதில் கிருத்துவர்களின் பங்கு வெட்டவெளிச்சமாகிறது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது ஜார்ஜின் புகார்.
sagayaraj-complaint-against-nityananda

sagayaraj-complaint-against-nityananda

நெல்லையில் மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் புகார் 

தினமலர், மே 21,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3723

இரண்டு மாதங்கள் கழித்து, இப்படி ஒரு கிருத்துவர் தமது மனைவி-குழந்தைகளை நித்யானந்தாவிடமிருந்து மீட்டுக் கொடுங்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

திருநெல்வேலி : நெல்லையில் காணாமல் போன மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுத் தருமாறு கணவன் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம், பேரின்ப நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.  தீராத வயிற்ற வலி காரணமாக விமலா அவதிப்பட்டு வந்தார். அப்போது சேலம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் வைத்தியர் மணியிடம் சென்றுள்ளனர். விமலாவுக்கு உடல் நலம் தேறியது. இதன் பின்னர் விமலாவை அக்குபஞ்சர் சிகிச்சை முறையை படிப்பதற்காக மணியிடம் அனுப்பி வைத்தார் சகாயராஜா. ஆனால் அதன் பின்னர் விமலா திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். இன்று மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் ஜார்ஜ் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மனைவி மற்றும் மகன்களை மணியிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மணிக்கு சாமியார் நித்யானந்தாவுடன் தொடர்பு இருந்தது என்றும் கூறியுள்ளார்.

கிருத்துவர்களின் சதி மற்றும், உலகளவில் கிருத்துவர்களின் செக்ஸ்-காமலீலைகள் வெளிவரும் போது, இந்த நித்யானந்தாவும் மாட்டிக்கொண்டது, அதில் முக்கியமாக லெனின் குருப் என்ற ஆள் பங்கு வகித்தது, ரஞ்சிதாவின் கேரளத் தொடர்பு…..இவையெல்லாம் முன்னமே பேசப் பட்டன.
இப்பொழுது யாக்கோபு மற்றும் லெனின் இவர்களுடைய தொடர்பு, கிருத்துவத் தொடர்பை நேரிடையாகவே எடுத்துக் காட்டுகிறது. லெனின் சொன்னதும், பணத்தை அள்ளித் தர, யாக்கோபு தயாராக இருக்கும் நிலை, யாக்கோபின் உடன்பாட்டைத் தான் காட்டுகிறது. மேலும் அத்தகைய கூப்பிட்டு கொடுக்கவைக்கும் திறன் லெனினுக்கு உள்ளது என்பதும் ஆச்சரியம் தான்!
நித்யானந்தா மீது மீன் வியாபாரி யாகோபு புகார்: 25 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார்
ஏப்ரல் 25,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18082

Important incidents and happenings in and around the world

யாக்கோபுவின் புகார்: கோவை: ‘நித்யானந்தா 25 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, மோசடி செய்து விட்டார்’ என, கோவையைச் சேர்ந்த மீன் வியாபாரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். கோவை அன்பு நகரை சேர்ந்த யாக்கோபு (35), கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: “நான் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2008 ஜனவரி 8ம் தேதி எனது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய லெனின் என்பவர், பெங்களூரில் ஆன்மிக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், இந்தியா முழுவதும் கிளைகளை ஏற்படுத்துவதாகவும், கஷ்டப்படும் ஏழைகளை ஆன்மிக பணியில் ஈடுபடுத்தி, வாழ்க்கையை மேம்படுத்தப் போகிறோம் என்றும் கூறினார்.

அவரது கனிவான பேச்சு, மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. சிக்கொண்டிருக்கும்போதே, சீடர்கள் உங்களுடன் பேசுவர் என்று சொல்லி மொபைல் போனை கட் செய்தார். சில நாட்களுக்கு பின், எனது மொபைலில் ஒரு பெண் பேசினார். ‘எங்களது அறக்கட்டளையில் சேர்ந்து ஒரு லட்சம் செலுத்தினால், ஐந்து லட்சமாக ஒரே ஆண்டில் திருப்பிக்கொடுப்போம். நாங்கள் கோவை வரும்போது பணம் கொடுத்தால் போதும்’ என்றார்.

அதைகேட்ட நானும், அறக்கட்டளையில் பணம் செலுத்த முடிவு செய்தேன். எனது மனைவியிடமிருந்த நகைகளை விற்று 25 ஆயிரம் ரூபாயை திரட்டினேன். அடுத்த ஒரு சில நாட்களில், முன்பு பேசிய அதே பெண், கோவையில் சரவணம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வந்து சந்திக்க அறிவுறுத்தினார் அங்கு சென்றபோது சந்திக்க முடியவில்லை. கடைசியில் வ.உ.சி., பூங்காவிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றபோது, மூன்று வெளிநாட்டு கார்கள் வந்தன. அதிலிருந்து இறங்கிய ஒருவர், தன்னை ‘லெனின்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். காரில் இருக்கும் சுவாமி நித்யானந்தாவிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினார். கையிலிருந்த 25 ஆயிரம் ரூபாயை, காரில் இருந்த நித்யானந்தாவிடம் கொடுத்தேன். சாமியார் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து, ‘உனது கஷ்டம் எல்லாம் தீரும்’ என்றார்.

அப்போது என்னைப்போல் மேலும் ஐந்து பேர் பணம் கொடுத்தனர். அதற்கடுத்து அங்கு குழுமிய சிலர், ‘நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்றனர். அப்போது சாமியாரின் சீடர்கள், கும்பலை மிரட்டி அப்புறப்படுத்தினர். என்னை போட்டோ எடுத்ததோடு, முகவரியை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். இதுவரை பணத்தை திருப்பித்தராத சாமியார் நித்யானந்தா, சீடர் லெனின் உள்ளிட்ட ஆறுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார் [அதாவது லெனினும் இந்த வழக்கில் சிக்கியுள்ளது தெரிகிறது. பிறகு எப்படி போலீஸார் விட்டுவிட்டனர்?].

லெனின் குருப் புகார்: நக்கீரன் கோபாலின் ஆளான லெனின் குருப், நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்து, பிறகு பிரச்சினையைக் கிளப்பிவிட்ட முக்கியமான ஆள். இவன் மற்றும் கோபால் கருணாநிதியை சந்தித்தாக செம்மொழி மாநாட்டில், கோபாலே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு-மூன்று நாட்களில், நித்யானந்தாவைப் பற்றி இன்னுமொரு புகார் வருகிறது.

லெனின்-யாக்கோபு-ஓஷோ மணி-சகாய ஜார்ஜ்…………………இப்படி தொடரும் மர்மம் என்ன? இப்பொழுது  இவர்களையெல்லாம் எல்லோரும் மறந்து விட்டார்களா? லெனின் இதைப் பற்றி இப்பொழுது – 2011ல் என்ன சொல்லமுடியும்?

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு பதில் to “கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?”

  1. K. Venkatraman Says:

    The way in which the christians have been working behind exposes their murkier role.

    Perhaps, a day would come to expose their undermining dealings of crruption, scam and crimes in India too.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: