சி.எஸ்.ஐ. பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

சி.எஸ்.ஐ. பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்
சென்னை, செவ்வாய், 13 ஏப்ரல் 2010( 09:20 IST )

வரி ஏய்ப்பு பிஷப்புகள்: செக்ஸ், பாலியல், வங்கிக் கொள்ளை………………என்றெல்லாம் செய்த பிறகு, இப்பொழுது வரி ஏய்ப்பிலும் இறங்கிவிட்ட பிழப், பாதிரிக் கூட்டங்களைப் பார்க்கும் போது, அவர்களது நாட்டுப் பற்று அதிகமாகவே தெரிகின்றது. அமெரிக்காவில் இருந்து மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ததில், குறைவாக மதிப்பீட்டு வரி செலுத்தி முறைகேடு செய்ததற்காக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பிஷப் தேவசகாயத்துக்கு சுங்கத் துறை ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் பேராயராக இருப்பவர் வி.தேவசகாயம். சென்னை பேராயத்துக்குச் சொந்தமான சென்னை கல்யாணி மரு‌த்துவமனை, ஆந்திரா மாநிலம் நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌‌த்துவமனை உட்பட பல மரு‌த்துவமனைகள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

அமெரிக்கா இலவசமாகக் கொடுப்பதலும் ஊழல் செய்யும் பிஷப்புகள், பாதிரிகள்: ஏழை மக்களின் நலனுக்காக மரு‌த்துவமனைகளுக்கு அய‌ல்நாட்டு தொண்டு நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் ‘வொர்ல்ட் மெடிக்கல் ரிலீப்’ என்ற அமெரிக்கா நிறுவனம், நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனைக்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக அனுப்பியது. இவற்றில் எக்ஸ்ரே, டயலசிஸ், இ.சி.ஜி. இயந்திரங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் மருந்துகள் உட்பட பல பொருட்கள் அடக்கம். இந்த நிலையில், மருந்துப் பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்து இருப்பதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை டி.ஆர்.ஐ. மேற்கொண்டது. பின்னர் இந்த விவகாரத்தை 2003ஆம் ஆண்டு சென்னை சுங்கத் துறை ஆணைய‌ரிடம் விசாரணைக்காக டி.ஆர்.ஐ. அனுப்பி வைத்தது. புகாரை பெற்றுக் கொண்ட அப்போதைய சுங்கத் துறை ஆணைய‌ர், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இறக்குமதியில் மோசடி: இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை மிகுந்த குறைவாக மதிப்பிட்டு காட்டியதும், உண்மையான மதிப்பை மறைத்தும், வரியை குறைத்தும் கட்டியது தெரியவந்தது. எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி நகரி சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனை நிர்வாகம், பிஷப் தேவசகாயம், சென்னை சி.எஸ்.ஐ. கல்யாணி மரு‌த்துவமனை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் டாக்டர் ராஜகுமாரி சுந்தர், ஏஷியன் ஷிப்பிங் ஏஜென்சீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார், சென்னை தனியார் மருந்து கம்பெனியைச் சேர்ந்த தாமோதரன் ஆகியோருக்கு விளக்கம் அளிக்க தா‌க்‌கீது அனுப்பப்பட்டது. இந்த தா‌க்‌கீது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போதிருந்த சென்னை சுங்கத்துறை ஆணைய‌ர் ராஜன் அவர்களை விசாரித்தார். அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து, கடந்த 31.3.10 அன்று சி.ராஜன் உத்தரவு பிறப்பித்தார்.

வரி ஏய்ப்பு க்அந்து பிடிக்கப் பட்டது: அதில், அமெரிக்காவில் இருந்து ரூ.2.22 கோடி மதிப்புள்ள மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு ரூ.1 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 142 வரியாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் அவற்றை குறைத்து மதிப்பிட்டு குறைவாக வரி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக அளவு மதிப்புள்ள இதுபோன்ற பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால், வரிச் சலுகைக்காக அரசை ஏற்றுமதியாளர்கள் அணுகலாம். சுங்கத்துறை சட்டத்தின்படி முறைகேடாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். ஆனால் அவர் நீண்ட நாட்களுக்கு முன்பே கொண்டு வரப்பட்டுவிட்டன. நகரியில் உள்ள சி.எஸ்.ஐ. மரு‌த்துவமனை நிர்வாகம், ரூ.1.34 கோடி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும். டாக்டர் ராஜகுமாரி சுந்தர், பிஷப் தேவசகாயம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏ.பி.பிரேம்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், தாமோதரனுக்கு ரூ.25 ஆயிரமும், சூப்பிரன்டென்டன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதற்கு இதுபோன்ற மோசமான வழியை தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஏசுவின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக நடந்துள்ளனர். வரி செலுத்துங்கள் என்றுதான் ஏசு கூறி இருக்கிறார் எ‌ன்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “சி.எஸ்.ஐ. பிஷப் தேவசகாயத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!”

 1. vedaprakash Says:

  டயோசிசன் பணத்தை செலவிட பிஷப் தேவசகாயத்திற்கு தடை
  சென்னை, புதன், 9 டிசம்பர் 2009( 12:25 IST )
  http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0912/09/1091209029_1.htm

  வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது என்று பிஷப் தேவசகாயத்திற்கு மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இடைக்கால தடை விதித்துள்ளது.

  தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயத்தின் பேராயராக 2.5.99 அன்று வி.தேவசகாயம் (60) பொறுப்பேற்றார். அப்போது, இந்த பதவியை 10 ஆண்டுகள் (1.5.2009 வரை) மட்டுமே வகிப்பதாக சி.எஸ்.ஐ.யின் பிரதம பேராயமான `சினாட்’டிடம் தேவசகாயம் எழுதிக்கொடுத்திருந்தார்.

  ஆனால், 10 ஆண்டுகள் முடிந்த பிறகும் பேராயர் பதவியில் இருந்து தேவசகாயம் விலகவில்லை. இதை எதிர்த்து சி.எஸ்.ஐ. சபை உறுப்பினர் சங்கம் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்தது. வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்தது. தேவசாயம் பதவி காலம் முடிந்துவிட்டதால் அடுத்த பேராயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் காபந்து பேராயராகத்தான் நீடிக்க வேண்டும் என்று பேராய‌ர் சினாட் உத்தரவிட்டா‌ர்.

  இடைக்கால தடையையும், சினாட் உத்தரவையும் எதிர்த்து உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சினாட் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் மே‌ல்முறை‌யீடு செய்தார். இந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது.

  இதற்கிடையில் தனிப்பட்ட முறையில் அவர் தனக்காக நடத்தும் வழக்குகளுக்கு திருச்சபையின் பணத்தை எடுத்து செலவழிக்கிறார் என்றும், வழக்கு செலவுக்காக ரூ.40 லட்சம் பணத்தை பேராயத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தேவசகாயத்தின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

  இந்த நிலையில், சி.எஸ்.ஐ. கல்வாரி சர்ச் பாஸ்டரேட் தலைவர் எஸ்.டி.சவுந்திரராஜன் பாதிரியார், சென்னை மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”தேவசகாயம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு சொந்த வழக்குகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வழக்கு செலவுகளுக்காக சென்னை சி.எஸ்.ஐ. டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது. அவ்வாறு அவர் செலவிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

  நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, பிஷப் தேவசகாயம் வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை வரும் 14ஆ‌ம் தேதி வரை செலவிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 2. vedaprakash Says:

  நீதிமன்றத்தில் சிஎஸ்ஐ பிஷப் சரண்

  First Published : 24 Feb 2010 10:28:16 AM IST

  Last Updated : 24 Feb 2010 12:40:02 PM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?Title=………..ectionID=98&MainSectionID=98&SectionName=Edition-Coimbatore&SEO=

  கோவை, ​​ பிப்.23: திருச்சபை நிதியை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ​ கோவை நீதிமன்றத்தில் சிஎஸ்ஐ பிஷப் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தார்(படம்).

  கோவை திருமண்டல சிஎஸ்ஐ பிஷப் மாணிக்கம் எஸ்.துரை.​ அவர் திருச்சபை நிதியில் இருந்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக சிங்காநல்லூரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் மாநகரக் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

  இதையடுத்து,​​ பிஷப் மாணிக்கம் எஸ்.துரை,​​ அவரது சகோதரர்கள் மூர்த்தி,​​ தனபால் மற்றும் திருச்சபை முன்னாள் செயலர் அமிர்தம் உள்பட மொத்தம் 31 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.

  அதன்பின்,​​ இந்த வழக்கு சிபிசிஐடி}க்கு மாற்றப்பட்டு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.​ ​

  ​ இதற்கிடையே,​​ கோவை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு பிஷப் மாணிக்கம் எஸ்.துரை மனு தாக்கல் செய்தார்.​ ஆனால்,​​ அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.​ மனுவை விசாரித்த நீதிபதி,​​ ரூ.1 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள்,​​ தலா ரூ.1 லட்சத்துக்கான இரு நபர் ஜாமீன்,​​ பாஸ்போர்ட் ஆகியவற்றை கோவை ​

  ஜூடீசியல் மாஜிஸ்திரேட் எண்:3}ல் கொடுத்து சரண் அடைய வேண்டும்.​ மேலும்,​​ ஞாயிறு தவிர தினமும் காலை 10 முதல் 12.30 மணிக்குள் சிபிசிஐடி போலீஸில் நேரில் ஆஜராகி தொடர்ந்து 15 நாள்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

  ஆனால்,​​ பிஷப் மாணிக்கம் எஸ்.துரை வெகுநாட்களாக நீதிமன்றத்தில் சரணடையவில்லை.​ இதற்கிடையே,​​ செவ்வாய்க்கிழமை அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

  அவருக்கு மதுக்கரையைச் சேர்ந்த குணசிங் ரூ.50 லட்சமும்,​​ சங்ககிரியை சேர்ந்த ​

  கிறிஸ்டோபர் ரூ.30 லட்சமும்,​​ ஈரோட்டை சேர்ந்த தன்ராஜ் ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பு சொத்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.​ மேலும்,​​ ஆலாந்துறையை சேர்ந்த ஜான்சிராணி,​​ பேரூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த பாக்கியசீலி ஆகிய இருவரும் இருநபர் ஜாமீன் கொடுத்தனர்.

  இவற்றை நீதிபதி ​(பொறுப்பு)​ அருணாச்சலம் ஏற்றுக் கொண்டதால் பிஷப் மாணிக்கம் எஸ்.துரை}க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 3. vedaprakash Says:

  தென்னிந்திய திருச்சபை பிஷப் வழக்கு: தற்காலிகமாக தொடர ஐகோர்ட் உத்தரவு
  செப்டம்பர் 20,2009,00:00 IST
  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4041

  சென்னை: தென்னிந்திய திருச்சபையின் பிஷப் ஆக, 65 வயது வரை தேவசகாயம் தொடர உரிமையுள்ளது என பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய பிஷப் நியமிக்கப்படும் வரை, இடைக்காலமாக பதவியில் தொடர தேவசகாயத்துக்கு, ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

  சென்னையில் உள்ள லெயிட்டி அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவில், “சி.எஸ்.ஐ., பிஷப் ஆக 10 ஆண்டுகளுக்கு தேவசகாயம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த மே 1ம் தேதி முடிந்துவிட்டது. அதன் பின், அவர் பதவியில் தொடரக் கூடாது. எனவே, அவர் பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது. பிஷப் தேவசகாயம் தாக்கல் செய்த மனுவில், “விதிகளின்படி, 65 வயது முடியும் வரை, பிஷப் ஆக பதவியில் தொடர உரிமையுள்ளது. எனவே, பிஷப் ஆக பணியாற்றுவதில் மற்றவர்கள் குறுக்கிட தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

  இம்மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, “பிஷப் தேவசகாயம் 65 வயது நிரம்பும் வரை, பதவியில் தொடர உரிமையுள்ளது’ என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகத்தின் பொதுச் செயலர் மோசஸ் ஜெயகுமார், “மாடரேட்டர்’ கிளாடுஸ்டோன், அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். இதை நீதிபதிகள் சொக்கலிங்கம், சுப்பையா அடங்கிய, “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அப்பீல் மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் பிரகாஷ், வக்கீல் அட்ரியன் ரொசாரியோ ஆஜராகினர்.

  “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: தனது பதவிக் காலம் 65 வயது வரையிலானது, 10 ஆண்டுகள் இல்லை என தேவசகாயம் கூறினால், சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகம் அதை தெளிவுபடுத்தியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. உடல்நிலையை கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்குத் தான் நியமனம் எனக் கூறி, தேவசகாயத்தை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. பதவிக் காலம் எவ்வளவு என்பதை தேவசகாயத்திடம் கூறியுள்ளனர். அதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். பின், தேவசகாயத்தின் நியமனத்தை சி.எஸ்.ஐ., தலைமைச் செயலகம் உறுதி செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு தான் நியமனம் என்பதை முதலில் ஏற்று, தற்போது 65 வயது வரை தொடர்வேன் எனக் கூறுவதை அனுமதிக்க முடியாது.

  சிவில் நடைமுறைச் சட்டத்தின்படி அனுமதி பெறாமல், சி.எஸ்.ஐ., நிர்வாகக் குழுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அப்பீல் மனுக்கள் ஏற்கப்படுகின்றன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய பிஷப் நியமிக்கப்படும் வரை, இடைக்காலமாக தேவசகாயம் பதவியில் தொடர அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

 4. K. Venkatraman Says:

  It is only a tip of ice berg.

  What happened to the past imports and the benefits accrued?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: