கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில்

கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில்

பிப்ரவரி 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

Front page news and headlines today
செஞ்சி : செஞ்சியில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவில் உள்ள இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என கோரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கோட்டையை வலிமையானதாக மாற்றியதுடன், செஞ்சியைச் சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர்.இதனால், இந்திய மன்னர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பேரரசர்கள், ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியின் மீது தீராத மோகம் இருந்தது. ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால், தென்னிந்தியாவில் செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது.கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது.

இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் பேரழிவை சந்தித்தன.இதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது.ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன.ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

சீத்தாராமர் கோவிலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிபாடு நடக்காமல் இருந்த காலத்திலும், இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும், சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்தது.இந்த கோவிலில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ம் தேதி இந்த கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் செய்தனர்.இப்பிரச்னை தொடர்பாக செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இரண்டு முறை சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கிறிஸ்தவர்கள் தரப்பில் 1878ல் திண்டிவனம் சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ஆதாரமாக காட்டி உள்ளனர்.இந்த பத்திரத்தில் கோதண்டராமர் கோவில் உள்ள 1.70 ஏக்கர் நிலத்தை மயிலம் தேவஸ்தான ஆதினம் பரம்பரை தர்ம கர்த்தா சிவக்கியா பாலய சுவாமிகளிடம் இருந்து செம்மேடு மதுரா வேலந்தாங்கல் ரெவரெண்டு யெப்டாருஸ் என்பவர் 500 ரூபாய்க்கு கிரயம் வாங்கியுள்ளார்.இதே பத்திரத்தில் மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பதாக இந்துக்கள் தரப்பில் கூறுகின்றனர். பத்திரப் பதிவின் போது மடத்தினர் இந்த சொத்தை கிரயம் பெற்றதற்கான மூலப்பத்திரமும், கோவில் நிலத்தை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட டிரஸ்டி பத்திரமும் இணைத்து வழங்கியதாக கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த இரண்டு பத்திரத்தையும் கிறிஸ்தவர்கள் தரப்பில் சமாதானக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. பிரச்னைக்குரிய இடத்திற்கு சமீபத்தில் எடுத்த வில்லங்க சான்றிதழில், 1878ல் நடந்த கிரயத்தை தவிர வேறு சொத்து பாரிமாற்றம் நடக்கவில்லை. இதற்கிடையே கோவில் இடத்திற்கான பட்டா காண்டியார் என்பவர் மீது மாற்றப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் இருந்த கோதண்டராமர் கோவிலை மீண்டும் கட்ட 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான வேலைகளை இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முன்தினம் கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை நடக்க உள்ள சமாதானக் கூட்டத்தில் எடுக்க உள்ள முடிவிற்காக இரண்டு தரப்பினரும் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.

கோவில் இடத்தை காட்டும் எழுத்துக்களை அழித்துள்ளதாக புகார் : அரசு வரைபடத்தில் கோதண்டராமர் கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் எழுத்துக்கள் சமீபத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக ஆலய அறக்கட்டளை தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை குறித்து கோதண்டராமர் ஆலய அறக்கட்டளையை நிறுவி கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ரங்கராமானுஜதாசர் கூறியதாவது:தாலுகா அலுவலகத்தில் கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்துள்ள கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்தின் மூலப்பத்திரமும், டிரஸ்டி பத்திரமும் கேட்டு தாசில்தாரிடம் மனு செய்தும் இதுவரை சமர்ப்பிக்க வில்லை. இந்த பத்திரங்கள் கிடைத்தால் தான் கோவிலை விற்பனை செய்யும் உரிமை விற்பனை செய்தவருக்கு உள்ளதா என்பது தெளிவாகும். இதில் டிரஸ்டிகளாக இருந்தவர்கள் விவரமும் தெரியவரும்.

கிரயத்திற்கு பிறகு இன்றைய நாள் வரை எந்த சொத்து பரிமாற்றமும் நடக்காத நிலையில் எந்த அடிப்படையில் காண்டியார் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு கடந்த மாதம் 4ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால், இதுவரையில் இந்த மனுவிற்கு பதில் அளிக்க வில்லை.அரசிடம் உள்ள நிலத்தின் வரைபடத்தில், கோவில் இடத்தை சுட்டிக்காட்டும் வகையில் இருந்த எழுத்துக்களை சமீபத்தில் வெள்ளை மை கொண்டு அழித்துள்ளனர். இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

குன்றின் மீது திடீர் பிள்ளையார் செஞ்சியில் பரபரப்பு
ஏப்ரல் 16,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17838

Important incidents and happenings in and around the world

செஞ்சி:செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது திடீரென பிள்ளையார் சிலையை வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் சிறிய குன்று உள்ளது. இக்குன்று செஞ்சிக்கோட்டையை பராமரித்து வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு இக்குன்றின் மீது ஒன்றரை அடி உயரமுள்ள பிள்ளையார் சிலையை சிலர் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் இதே குன்றின் உச்சியில் கிறிஸ்தவர்கள் மாதா சிலை அமைத்து அதன் மீது சிலுவை வைத்திருந்தனர்.கடந்த மாதம் செஞ்சிக்கு வந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் எல்லா குன்றுகள் மீதும், சிலுவைகளை பதிப்பதை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்துக்களும் குன்றுகள் மீது சாமி சிலைகளை வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.இந்நிலையில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டு பகுதியில் பிள்ளையார் சிலை வைத்திருப்பது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குன்றுகளின் மீது  சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு, நில அகபரிப்பு…………….போன்ற வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு உள்ளூர் போலீஸ், அரசியல்வாதிகள், ரவுடிகள்….உடந்தை. குறிப்பிட்ட காலத்தில் கோடிகளை சுரட்டலாம், என்ற ரீதியில் செயல்படுகின்றனர். மறுபக்கம், இத்தகைய போலி வேலைகளைக் காட்டி, அயல்நாட்டு மிழனரிகலிடமிருந்தும் பணம் பெறுகிறார்கள். இதை அரசு தடுக்காவிட்டால், இதுவே ஐ.பில்.எல் மோசடி மாதிரி ஒரு நாள் பெரிய பூதமாக வெளிப்படும்.

குறிச்சொற்கள்: , , , , , ,

6 பதில்கள் to “கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில்”

 1. Kuppusamy Says:

  நிச்சயமாக கிருத்துவர்கள் கோவில் நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் செயல்பட்கிறார்கள் என்று நன்றாகவேத் தெரிகிறது.

  ஏற்கெனவே, நாகப்பட்டினம், ஓரியூர், மதுரை, திருச்சி, மயிலம், பாண்டிச்சேரி, காரைக்கால், மைலாப்பூர், பரங்கிமலை, ……………………போன்ற பல இடங்களில் இத்தகைய அநியாயத்தைச் செய்துள்ளனர்.

  எனக்கு 1940 லிருந்து, இவர்கள் செய்து வரும் வேலகளைக் கவனித்து வருகிறேன். சமீபத்தில், திண்டிவனத்திற்கு போகும் வழியிலிருந்து, அச்சிறுப்பாக்கத்தில், ஒரு மலையை ஆக்கரமித்து, இன்று ஏதோ ஒரு பெரிய முக்கியமான சர்ச் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டுருக்கிறார்கள். வெளிநாட்டினரை அங்கு வரவழைத்து புதிய கதைகளைக் கட்டி விட்டுக் கொண்டிருக்கிறர்கள்!

  ஆகவே, இவர்களை சும்மா விடுவது சரியில்லை.

  மறுபடி, மறுபடி, அத்தகைய ஆக்கிரமிப்பு வேலைகளில் அவர்கள் ஈடுபடாத அளவிற்கு அவர்களைக் கட்டுப் படுத்தி வைக்க வேண்டும்.

  • vedaprakash Says:

   நீங்கள் சொல்வது சரிதான்.

   அங்குள்ள மக்கள், இப்பிரச்சினையை தகுந்த முறையில் அணுகி அவர்களை அடக்கி வைக்கவேண்டும்.

   முதலில், கிருத்துவர்கள் – முன்பு தாம் இந்துக்கள் என்பதனை உணர வேண்டும், இறக்குமதி செய்யப்பட்ட மதம், கடவுளர், மத நூல்கள் முதலியவற்றைத்தான் அவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதனை அவர்கள் மனமார உணரவேண்டும்.

   அப்பொழுது, இந்து கோவில்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யமாட்டார்கள்!

   அனால், இந்துக்களுக்கு அப்படி இல்லை. எல்லாமே இங்குதான் இருக்கின்றன. ஆகவே, அதை ஆக்கிரமிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

 2. vedaprakash Says:

  குன்றின் மீது திடீர் பிள்ளையார் செஞ்சியில் பரபரப்பு
  ஏப்ரல் 16,2010,00:00 IST

  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17838

  செஞ்சி:செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது திடீரென பிள்ளையார் சிலையை வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் சிறிய குன்று உள்ளது. இக்குன்று செஞ்சிக்கோட்டையை பராமரித்து வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு இக்குன்றின் மீது ஒன்றரை அடி உயரமுள்ள பிள்ளையார் சிலையை சிலர் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

  சில மாதங்களுக்கு முன் இதே குன்றின் உச்சியில் கிறிஸ்தவர்கள் மாதா சிலை அமைத்து அதன் மீது சிலுவை வைத்திருந்தனர்.கடந்த மாதம் செஞ்சிக்கு வந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் எல்லா குன்றுகள் மீதும், சிலுவைகளை பதிப்பதை அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்துக்களும் குன்றுகள் மீது சாமி சிலைகளை வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.இந்நிலையில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டு பகுதியில் பிள்ளையார் சிலை வைத்திருப்பது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 3. செஞ்சி கோவில் வழக்கு: இந்துக்களும், கிருந்துவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? « நாத்தி Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%A… […]

 4. முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்! « நாத்திகமும்-ஆலயநிர Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%A… […]

 5. முறைகேடாக குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படும்! « நாத்திகமும்-ஆலயநிர Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/02/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: