பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

பொங்கல் விழா தகராறில் கொலை:பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்: திண்டுக்கல் அருகே பதட்டம்
ஜனவரி 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15478

Important incidents and happenings in and around the world

பொங்கல் விழா தகராறு: திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பொங்கல் விழா தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இறந்தவர் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள், ஆம்புலன்சை முற்றுகையிட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ளது பெருமாள்கோவில்பட்டி. இங்கு வசிக்கும் கிறிஸ்தவ, இந்து வன்னியர்களிடையே திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 96ம் ஆண்டு இருபிரிவினரும் விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மோதிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு, கிறிஸ்தவ வன்னியர் விழா கொண்டாட, காளியம்மன் கோயில் முன், சப்பரம் நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து இந்து வன்னியர்கள் ஊரை விட்டு வெளியேறி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தஞ்சமடைந்தனர். அதிகாரிகளின் சமரசத்தால், 15 நாட்களுக்கு பின், மீண்டும் ஊர் திரும்பினர்.

நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு, மாடுகள் வயலில் இறங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஆண்டி(45) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக எதிர்தரப்பைச் சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகநாதன் என்பவரை தேடி வருகின்றனர். மோதல் ஏற்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிணத்தை வாங்க மறுப்பு: கொலை செய்யப்பட்ட ஆண்டியின் உடல், நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டது. பெருமாள் கோவில்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பிரச்னைக்கு நிரந்த தீர்வு, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியை உடனடியாக துவக்குதல், கிறிஸ்தவர்கள் சப்பரம், எங்கள் இடத்தில் நிற்கக்கூடாது என்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை பிணத்தை கொண்டு செல்ல விடமாட்டோம் என்று கூறி ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து சிலர் மறியல் செய்தனர். டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல், எஸ்.பி., முத்துச்சாமி, ஆர்.டி.ஓ., ராமசாமி, டி.எஸ்.பி.,க்கள் ராஜாராம், ராமமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கலெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான், நாங்கள், பிணத்தை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்றனர். 2 வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த ஆர்.டி.ஓ.,அழைப்பு விடுத்தும் ஊர் மக்கள் புறக்கணித்தனர்.தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை இறந்த ஆண்டியின் உடல் ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது.

அரசு ஆஸ்பத்திரியில் பிணத்தை வாங்க மறுத்தவர்களிடம், முதற்கட்டமாக போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இதையடுத்து ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக கலெக்டர் வள்ளலார், முகாம் அலுவலகத்தில் அவர்களை சந்தித்து பேசினார். “பிரச்னைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு, பணிகள் நடக்க முயற்சி எடுக்கப்படும்’ என்றார். அரசியல் பின்னணியால், எதிர் தரப்பினரை கைது செய்வதில் போலீசார் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி., முத்துச்சாமி “அடுத்தடுத்த பிரச்னைகளால், கைது நடவடிக்கையை கவனிக்க முடியவில்லை. தொடர் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்’ என்றார்.இதையடுத்து மாலை 3.30க்கு இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த வாகனத்தை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.

30 முறை நடந்த பேச்சுவார்த்தைதோல்விக்கு காரணம் என்ன:பெருமாள்கோவில்பட்டியில் இந்து வன்னியர், கிறிஸ்தவ வன்னியர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காளியம்மன் கோயில் முன், 12 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்த இடத்திற்கு இருதரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2008ல் மீண்டும் விழா கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த வாசுகி, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் காளியம்மன் கோயில் முன், மண் போட்டு உயர்த்திக் கொள்ள வேண்டும். சர்ச் சப்பரத்தை ஓரத்தில் நிறுத்திக் கொள்ளலாம். கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்து கொள்வது, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.ஆனாலும், பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் நிரந்தரமாக இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் போலீசார் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டு, கொலையில் முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில், 30 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அரசியல் தலையீடு காரணமாகவே அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து வருகிறது.

Advertisements

ஒரு பதில் to “பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!”

  1. குப்புசாமி Says:

    எனக்குத் தெரிந்து ஒரு கிறிச்தவ தாடி சாமியார் மைலாப்புரில் இருந்தது. அவகளுக்கு அய்க்கிய ஆலயம் என்று ஒன்று இருந்தது. அங்கு பொங்கல், தீபாவளில் எல்லாம் கொண்டாடுவார்கள். நவராத்திரிக்கு சுண்டல் கொடுப்பாடர்கள்!

    பிறகு எதர்கு இந்த கிறிஸ்தவர்கள் கலாட்டா செய்கினனர்?

    அய்யோ கொலை வேறு செய்கின்றனரே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: